"தலைகீழாக நின்றால் எப்படி காலூன்ற முடியும்.?"- தமிழிசை நையாண்டி

தலைகீழாக நின்றால் தமிழகத்தில் பாஜக எப்படி காலூன்ற முடியும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை நையாண்டியாக  பதிலளித்துள்ளார். 

தமிழிசை

சிவகங்கையில் பி.ஜே.பி.யின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.கே.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பிஜேபி தயாராகவுள்ளது. மத்திய அரசுடன்  தற்போதுதான் மாநில அரசு இணக்கமாக இருக்கிறது. மதுரவாயல் பறக்கும் பாலத்துக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவது எங்களுக்கு ஒன்றும் பிரச்னையில்லை. இந்த நாட்டை காங்கிரஸ், திமுக ஆளாமல் தற்போது பிறந்ததுபோல் பேசுகிறார்கள். 'கலைஞருக்கு வைர விழா நடத்துகிறார்கள், அந்த விழாவுக்கு வரும் ஆட்களோ 2-ஜி , மாட்டுதீவன ஊழல், மேலும் பல ஊழல் வழக்கில் சிக்கியவர்கள். பிஜேபி தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் காலூன்ற முடியாது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். தலைகீழாக நின்றால் எப்படி கால் ஊன்றமுடியும் என்று எதிர் அணியினரை நையாண்டி செய்தார் தமிழிசை.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!