'பாகுபலி'யாக மாறிய புதுச்சேரி முதல்வர்! தெறிக்கவிட்ட தொண்டர்கள்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பாகுபலி போல சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி

அரசியல் தலைவர்களின் அதிரடி பேனர்களுக்கு பெயர் பெற்றது புதுச்சேரி. வார்டு கவுன்சிலர் தொடங்கி முதலமைச்சர் வரை யார் வீட்டு விசேஷமானாலும் புதுச்சேரி முழுவதும் பேனர்கள் அமர்களப்படுத்தும். குறிப்பாக பிரபல திரைப்படங்களின் போஸ்டர்களில் சில கட்டிங், ஒட்டிங் வேலை பார்த்து அலப்பறை கொடுப்பார்கள் தொண்டர்கள். 

இதனிடையே வரும் 30 ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாள் வருகிறது. அதற்குள் நாராயணசாமியின் பேனர்களால் கலைக்கட்டத் தொடங்கிவிட்டது புதுச்சேரி. குறிப்பாக சமீபத்தில் வந்து சக்கைப்போடு போடுகிற 'பாகுபலி' திரைப்படத்தின் போஸ்டர்களில் நாராயணசாமி கலக்கும் பேனர்களை காணமுடிகிறது. இந்த ஒரு வாரத்தில் பாகுபலியாக மாறியுள்ள புதுச்சேரி முதல்வர் இன்னும் பல அவதாரங்களை பேனர்களின் வாயிலாக எடுக்கப்போவது உறுதி!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!