Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதுகுறித்து பிரணாப் முகர்ஜி விளக்கம்..!

'குடியரசுத் தலைவர் தேர்தலில், தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் ஆர்வம்காட்டிவருகின்றனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித்தொடர்புச் செயலாளர் வேணு ராஜமணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, 'இன்னும் இரண்டு மாதங்களில் எனது பணி நிறைவுபெற இருக்கிறது. விரைவில், புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். இன்னொரு முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை, அந்தந்தத் துறைகளுக்குத் திருப்பி அனுப்புகிறேன்' என்று தெரிவித்தார். 
 
அடுத்த கட்டுரைக்கு