மாட்டிறைச்சி விவகாரத்தில் மெளனம்... தமிழக முதல்வருக்கு முத்தரசன் கேள்வி

மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பது ஏன் என சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தரசன்

நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்தத் தடை அறிவிப்பு, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு கட்சி தலைவர்களும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான கண்டனங்களை முன்வைத்தனர்.

இதனிடையே மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மௌனமாக இருப்பது ஏன் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற மாநில முதல்வர்கள் மாட்டிறைச்சி தடை விஷயத்தில் தங்கள் கருத்தை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ' அதிமுகவின் இரு அணியினரும் பதவியை தக்க வைத்துகொள்ளவே பிரதமர் மோடியை சந்திப்பதாகவும்' அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!