திமுக போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! | Highcourt allows DMK to conduct protest in Pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (10/06/2017)

கடைசி தொடர்பு:15:56 (10/06/2017)

திமுக போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

புதுக்கோட்டையில் போராட்டம் நடத்த தி.மு.கவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஸ்டாலின்

புதுக்கோட்டையில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

இதனிடையே எம்.எல்.ஏக்கள் கைதை கண்டித்து ஜூன் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது, தி.மு.க.வின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. 'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டம் நடத்த வேண்டும்' எனக் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நாளை புதுக்கோட்டை சின்னப்ப பூங்கா அருகே போராட்டம் நடைபெறுகிறது.