'அ.தி.மு.க.,வுக்குள் போட்டா போட்டி நடக்கிறது' - ஸ்டாலின் தடாலடி!

stalin

அ.தி.மு.க.,வுக்குள் பெரும் போட்டா போட்டி நடக்கிறது என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன் என முதல்வர் என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால், அதுமாதிரியான முயற்சியில் நான் ஈடுபடவில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.,வின் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி பற்றி பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா பேசி இருப்பது கண்டிக்கதக்கது. அவரது பேச்சு மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது. மேலும், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களில் கலப்படங்களை தடுக்க ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடம் உள்ளிட்ட விவகாரங்களில் அ.தி.மு.க.,வுக்குள்ளேயே கடும் போட்டா போட்டி நடக்கிறது', என ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!