Published:Updated:

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி விலகல்!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி விலகல்!
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி விலகல்!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி விலகல்!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகுவதாக முகுல் ரோஹித்கி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் முகுல் ரோஹித்கி. இவர் இந்தியாவின் 14-வது தலைமை வழக்கறிஞர் ஆவார். குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியால் 2014 ஜூன் 19 ஆம் தேதி, தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு வரை உள்ளது. 

இந்நிலையில், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், தலைமை வழக்கறிஞர் பதவியில் தொடர விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு, குஜராத் கலவர வழக்கில், குஜராத் மாநிலத்தின் சார்பாக இவர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதும், மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
 

அடுத்த கட்டுரைக்கு