Published:Updated:

மாட்டிறைச்சி விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மாட்டிறைச்சி விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! மத்திய அரசுக்கு நோட்டீஸ்
மாட்டிறைச்சி விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

'இறைச்சிக்காக மாடுகளை விற்பனைசெய்யக்கூடாது' என்ற மத்திய அரசின் அரசாணைக்குத் தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத்  தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராகப்  பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. அரசின் இந்த அறிவிப்புக்கு பல மாநில அரசுகள் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இறைச்சி தடைஉத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தடை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி கால அவகாசமும் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.