Published:Updated:

'முத்தலாக் விஷயத்தில் ஏன் மதச்சார்பற்றவர்கள் அமைதி காக்கின்றனர்!'- ஆதித்யநாத் கேள்வி

ர.பரத் ராஜ்
'முத்தலாக் விஷயத்தில் ஏன் மதச்சார்பற்றவர்கள் அமைதி காக்கின்றனர்!'- ஆதித்யநாத் கேள்வி
'முத்தலாக் விஷயத்தில் ஏன் மதச்சார்பற்றவர்கள் அமைதி காக்கின்றனர்!'- ஆதித்யநாத் கேள்வி

முத்தலாக் விஷயம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில், 'முத்தலாக் விஷயத்தைப் பற்றி தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் பேசாமல் அமைதியாகவே இருக்கின்றனர்.' என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதித்யநாத், 'நிதிஷ் குமார், முஸ்லிம் பெண்களை வெகுவாக பாதிக்கின்றது என்று அறிந்தும் இதுவரை முத்தலாக் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை. மதச்சார்பற்றவர்கள் ஏன் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர்? மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பொதுத் தளத்தில் ஒன்றைக் கூறிவிட்டு, நிஜ வாழ்க்கையில் வேறொன்றைச் செய்கின்றனர்.' என்று விமர்சனம் செய்தார்.

ராமர் கோயில் விவகாரத்தைப் பற்றி ஆதித்யநாத், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி நடக்கும்' என்று சூசகமாக பதில் கூறினார். 

மேலும் அவர், 'வரும் 2020 ஆம் ஆண்டு பீகாரில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வாருங்கள். அப்போதுதான் தேசிய வளர்ச்சியுடன் பீகார் மாநிலத்தின் வளர்ச்சி ஈடு கொடுக்கும். பீகார் மாநிலத்தில் இனி நான் சீரான இடைவெளியில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன். வரும் 2020 சட்டமன்றத் தேர்தலுக்குள் நான் பீகாரில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுருக்கிறேன்.' என்று முடித்துக் கொண்டார்.