குடியரசுத்தலைவர் தேர்தல்: முலாயம் உடன் வெங்கய்யா சந்திப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரி வரும் பி.ஜே.பி, நேற்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கை சந்தித்து ஆதரவு கோரியது.

வெங்கய்யா நாயுடு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக பி.ஜே.பி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, புதுடெல்லியில் முலாயம் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பி.ஜே.பி சார்பில் அறிவிக்கப்படவுள்ள வேட்பாளரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே பி.ஜே.பி சார்பிலான பிரதிநிதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், முலாயமுடன் நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!