'தினகரனுக்கு அல்ல, இவருக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன்'- கருணாஸ் தடாலடி பேட்டி

"ஜனாதிபதி தேர்தலில், சசிகலா எடுக்கும் முடிவுக்குதான் கட்டுப்படுவேன்'' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்த பின்னர் இவ்வாறு தடாலடியாகக் கூறினார் கருணாஸ் எம்எல்ஏ.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அ.தி.மு.க செயல்பட்டுவருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், திடீர் திடீரென துணைச் பொதுச் செயலாளரைச் சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ், டி.டி.வி தினகரனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தினகரனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ''தினகரனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவரிடம் ஜனாதிபதி தேர்தல்குறித்து எதுவும் பேசவில்லை. ஜனாதிபதி தேர்தலில், சசிகலா எடுக்கும் முடிவுக்குதான் கட்டுப்படுவேன்'' என்று தடாலடியாகக் கூறினார்.

மாட்டிறைச்சி விவகாரத்தில், முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி கடந்த 20-ம் தேதி சட்டமன்றத்திலிருந்து கருணாஸ் வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!