மதுரை, புதுச்சேரியைக் கலக்கிய வெடிகுண்டு வழக்குகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டும், அந்த விவகாரத்தில் திகில் இன்னமும் முழுமையாக விலகவில்லை.

ஜனவரி மாதம் 29-ம் தேதி புதுச்சேரியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அடுத்த 10 நாட்களில் மதுரையில் உத்தங்குடி ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் அதேபோன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாக கடந்த 10-ம் தேதி திருச்செல்வம், தங்கராஜ் என்ற தமிழரசன், கவியரசன் என்ற ராஜா ஆகியோரை கைதுசெய்து இருக்கிறார்கள் போலீஸார். தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுரை போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள் பகீர் ரகமாக இருக்கிறது.

தமிழ்நாடு போலீஸ், க்யூ பிராஞ்ச் போலீஸ் என 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்தும் எந்தவித துப்பும் இல்லாமல் திணறிப் போயிருந்த நிலையில், மதுரைப் பகுதியில் மீண்டும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. 'அய்யோ தமிழா... என்ன செய்யப்போகிறோம்’ - தமிழ் உரிமை மீட்புக் குழு என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டிய மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த காளிமுத்து என்ற நபரை மதுரை போலீஸ் தூக்கிவந்து விசாரித்தது. 'தமிழ் மொழியை நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டம் சம்பந்தமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் அது’ என்று தெரியவர... அவரை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காரைக்குடி வீட்டில் அதே மாதிரி பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் அடிபட்டன. 'வெடிகுண்டு இல்லை; துண்டு பிரசுரம் மட்டும் இருந்தது’ என்று ரிப்போர்ட் அனுப்பியது போலீஸ். இந்த வழக்கு தொடர்பாக சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் உளவுத் துறை ஐ.ஜி-யான கண்ணப்பனுக்கு அனுப்பப்பட்டது. மாவோயிஸ்ட் அனுதாபிகள், நக்ஸல் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் என எல்லா அமைப்புகளும் கண்காணிக்கப்பட்டன. பழைய, புதிய தமிழ் அமைப்புகள் பற்றிய கோப்புகளை எடுத்து விசாரித்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லை.

குண்டுவைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து சம்பந்தப்பட்ட தினங்களில் பேசப்பட்ட அனைத்து செல்போன் எண்களையும் சேகரித்த போலீஸார், அவற்றின் மூலம் யார் யாருக்கெல்லாம் பேசி வருகிறார்கள் என்று லிஸ்ட் எடுத்தனர். மதுரை, புதுச்சேரி, காரைக்குடி என்று மூன்று இடங்களிலும் உள்ள செல்போன் டவர்களில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட எண்கள் கிடைத்தன. அதில் சந்தேகப்படும் 20-க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களை மட்டும் தீவிரமாகக் கண்காணித்து, மதுரை போலீஸ் ஒருவரைத் தூக்கியது. அவர்தான் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த திருச்செல்வம்.

அவர், 18 ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தவர். அவருக்கு இதில் சம்பந்தம் இருப்பதை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் 'ஏன் குண்டு வைத்தாய்?’ என்று கேட்டபோது, 'எதற்கு வைப்பார்கள்? வெடிப்பதற்காகத்தான்! புதுச்சேரியில் குண்டுவைத்த நேரம் இரவு. ஆனால் பகலில்தான் பார்த்து எடுத்தார்கள். நாராயணசாமி வீட்டில் குண்டுவைக்க இரண்டு மாதங்களாகக் கண்காணித்து வந்தோம். இரண்டு முறை முயற்சிசெய்து, மூன்றாவது முறை வைத்தோம். சில்லறை வணிகர்களை நசுக்கிய அந்நிய முதலாளிகளுக்கு எச்சரிக்கை செய்ய ரிலையன்ஸ் மார்க்கெட்டில் பிப்ரவரி 7-ம் தேதி இரவில் குண்டுவைத்தோம். ஆனால், அது வெடிக்கவில்லை. நீங்கள் 11-ம் தேதிதான் வெடிகுண்டைக் கைப்பற்றினீர்கள்’ என்று அவர் அதிரடி குண்டு போட்டார்.

பிறகு அவரிடம் விசாரித்து, மதுரை மேலூர் மண்கட்டி தெப்பகுளம் பகுதியில் இருந்த தேவகோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தமிழரசன் என்பவரையும், சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூரைச் சேர்ந்த கவியரசு என்ற ராஜாவையும் 10-ம் தேதி நள்ளிரவில் பிடித்தது போலீஸ். அவர்களிடம் இருந்து லேப்டாப், ஐந்து செல்போன்கள், வயர், பைக் போன்றவற்றை கைப்பற்றியது. அவர்களிடமும் விசாரித்துவிட்டு உடனடியாக சென்னைக்கு ஒரு தனிப்படை அனுப்பப்பட்டது.

வளசரவாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் சினிமா இயக்குவதற்காகத் தங்கி இருந்தவர் தங்கராஜ் (எ) தமிழரசன். 'காதலே சுவாசம்’ என்ற பெயரில் படம் ஒன்று எடுத்துக்கொண்டு இருந்தார். அவரது வாடகை வீட்டுக்கு மட்டும் 30 ஆயிரம் மாத வாடகை கொடுத்திருக்கிறார். அவரது வீட்டில் இருந்து தீவிர தமிழ் பற்றுகொண்ட, மாவோயிஸ்ட் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், லேப்டாப் போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது போலீஸ். அதே சமயம் மதுரை வில்லாபுரத்தில் திருச்செல்வம் குடியிருந்த வாடகை வீட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தியது போலீஸ். அங்கிருந்து வெடிக்காத இரண்டு பைப் வெடிகுண்டு, மூன்று காலி பைப்கள், பவர்ஜெல் பாக்கெட்கள்... என்று வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களைக் கைப்பற்றியது.

மூன்று நபர்களையும் மதுரையை அடுத்து நத்தம் ரோட்டில் உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, 'தமிழர்களின் நிலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் தமிழனா?’ என்று மதுரை எஸ்.பி-யான விஜயேந்திர பிதரிடம் கேட்டிருக்கிறார் திருச்செல்வம். மூன்று நபர்களிடமும் முடிந்த வரை விசாரித்துவிட்டு, அவர்கள் சொன்ன விவரங்களின்படி அடுத்த மூன்று நபர்களைத் தூக்கி இருக்கிறது போலீஸ்.

இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் 'எனது மகனின் உயிருக்கு ஆபத்து. அவரை என்கவுன்ட்டர் செய்யப்போவதாகத் தெரிகிறது’ என்று திருச்செல்வத்தின் தந்தை வழக்குத் தாக்கல் செய்தார்.

11-ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூருக்குக் கொண்டுவந்து, மூன்று நபர்களையும் மேலூர் குற்றவியல் நீதிபதி பூபதி பாண்டியனிடம் ஒப்படைத்தனர். நீதிபதி அவர்களிடம், 'சமூகத்துக்கு நல்ல விஷயம் பண்ணி நல்லபடியாக வாழ வேண்டும். ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? அப்பாவி உயிர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?’ என்று அரை மணி நேரமாக அவர்களுக்குப் புத்தி சொல்லிவிட்டு, 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அடுத்தநாள் பகலில் திருச்செல்வம் தங்கி இருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு வெடிகுண்டுகளையும் மதுரையை அடுத்து உள்ள புது தாமரைபட்டியில் உள்ள கல்குவாரியில் வைத்து செயல் இழக்க வைத்தனர். மொத்தத்தில் வெடிகுண்டு கிலியில் இருந்து மீளவில்லை மதுரை!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: இ.பொன்குன்றம்,

எ.கிரேசன் எபினேசர்