'ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு மேடைக்குப் போனவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தலைவர்கள், அந்தச் சம்பவத்தில் இறந்துபோன எங்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?’ எனக் கொந்தளித்தனர் ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர். 2-3-2014 தேதியிட்ட ஜூ.வி. இதழில், இவர்களை விரிவாகப் பேட்டி எடுத்து, 'நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். ராஜீவ் காந்தி கொலையில் பலியான இந்தக் குடும்பங்களை ஒன்று திரட்டியவர்கள் ஜோதி ராமலிங்கமும் எம்.சாமுவேல் திரவியமும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றுசேர்த்து டெல்லி கூட்டிச்சென்று பிரியங்காவையும் ராகுலையும் சந்திக்க வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

ஜோதி ராமலிங்கம் நம்மிடம், ''தூக்குத் தண்டனைக் கைதிகளை விடுதலைசெய்து தமிழக அரசு தீர்மானம் போட்டதும், ராகுலையும் பிரியங்காவையும் சந்திக்கணும்னு முடிவு எடுத்தோம். அதை அடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் சந்திச்சுப் பேசினேன். ராஜீவ் கொலையில் பலியான கான்ஸ்டபிள் தர்மனின் மகன் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜுலுவின் தம்பி கோவிந்தராஜுலு, மகிளா காங்கிரஸ் நிர்வாகி சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ், சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த எட்வார்டு ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப் ஆகியோரை டெல்லிக்கு அழைச்சுகிட்டுப் போனோம். மூணு குடும்பங்கள் வர முடியாத சூழ்நிலை. மத்தவங்க வர மறுத்துட்டாங்க.

டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை முதலில் சந்திச்சோம். 'ராகுலை சந்திக்கணும்னு லெட்டர் கொடுத்துட்டு வாங்க. உங்களுக்கு அப்பாய்ன்மென்ட் வாங்கித்தரேன்’னு சொன்னாரு. நாங்களும் கடந்த 6-ம் தேதி ராகுல் காந்தி வீட்டுக்குப் போனோம். '1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உயிர் தியாகம் செய்தோருக்கான அமைப்பு’னு தலைப்பு எழுதி... யார் யாரெல்லாம் அதில் இறந்தாங்களோ, அவங்க பெயர்களை எழுதிக்கொடுத்துட்டுக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்துல திடீர்னு அந்த வரவேற்பு அறையில இருந்த எல்லாரும் எந்திரிச்சாங்க. கண் மூடித் திறக்கறதுக்குள்ள, நாங்க கொடுத்த பேப்பரோடு பிரியங்கா வந்து உட்கார்ந்தாங்க. எங்களுக்கு ஒண்ணுமே புரியல. பிரமிச்சுப் போயிட்டோம்.

ஏட்டு தர்மனின் மகன் ராஜ்குமார் என் பக்கத்துல உட்கார்ந்திருந்தார். அவர்கிட்ட, 'உங்க அப்பா இறக்கும்போது உங்களுக்கு எத்தனை வயசு?’னு பிரியங்கா கேட்டாங்க. 'எனக்கு ஏழு வயசும்மா’னு சொல்லி அவர் கண்கலங்க... அதைப் பார்த்த பிரியாங்காவும் கலங்கிட்டாங்க. அதன்பின், 'உங்க அப்பா ராஜீவ் உயிரிழப்பில், எங்க குடும்பங்களின் உயிரும் கலந்திருப்பது பெருமையா இருக்குது. இந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ராஜீவைக் கொலை பண்ணல. வெளிநாட்டுல இருந்துவந்த பெண்தான் இப்படிப் பண்ணிட்டா’ என்றதும் பிரியங்கா, 'ஆமாம். தமிழ் மக்கள் எங்கள் குடும்பத்தை நேசிப்பது தெரியும். என்னுடைய இரண்டு குழந்தைகளை ஒரு தமிழ்ப் பெண்தான் பராமரிக்கிறார்’ என்றார். 'என்ன உதவி என்றாலும் தயங்காமல் கேளுங்கள். ராகுலையும் சோனியாவையும் பார்க்க ஏற்பாடு செய்றேன்’ என்றவர், அவர்களை உடனடியா சந்திக்க ஏற்பாடு செய்தார்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சாமுவேல் திரவியம், ''10-ம் தேதி ராகுலைப் பார்த்தோம். 'ஏன் இவ்வளவு நாட்களாக எங்களைச் சந்திக்க வரல?’ன்னு கேட்டார். அவரது செகரட்ரியை அழைத்து, எங்களுக்குத் தேவையான உதவுகளை செய்யுமாறு சொன்னார். அதோடு, எப்ப வேணும்னாலும் அவரைச் சந்திக்கலாம்னு உறுதியளிச்சார். 'ஏன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை உங்களைக் கூட்டிட்டு வரலை?’னு ஆச்சர்யமாகக் கேட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எல்லாரும் காங்கிரஸ்ல சேருங்கனு சொன்னார்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ், ''சோனியாவை ஒரு நூலகத்துல சந்திச்சோம். ஒவ்வொரு குடும்பத்தைப் பத்தியும் தனித்தனியாக விசாரிச்சு குறிப்பு எடுத்துக்கிட்டாங்க. 'நீங்களும் நாங்களும் ஒரே குடும்பம்தான்’னு சொன்னாங்க. 'என்னோட அம்மா இறந்துட்டாங்க. நீங்கதான் எனக்கு அம்மா’னு சொன்னேன். ரொம்ப மனம் நெகிழ்ந்து போனாங்க. 'உங்களுக்கு நான் இருக்கிறேன்’னு சொல்லி, ஒவ்வொரு குடும்பத்தோடும் தனித்தனியா போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திச்சோம். அவர், 'உங்களுக்கான வசதிகள், வேலை வாய்ப்புகள், பாதுகாப்புகள், பொருளாதாரம் இந்த நான்கும் செய்துகொடுக்கத் தயாரா இருக்கோம். நாங்க எப்போதும் உங்களுக்குத் துணையா இருப்போம்’னு சொன்னார். எங்களுக்கு இப்போதுதான் நம்பிக்கை வந்திருக்கிறது'' என்றார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி