Published:Updated:

விவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கத் தயார்: சிவசேனா அறிவிப்பு!

விவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கத் தயார்: சிவசேனா அறிவிப்பு!
விவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கத் தயார்: சிவசேனா அறிவிப்பு!

மஹாராஷ்ட்ராவில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்தற்காக, தங்களின் ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக அந்த மாநிலத்தின் முக்கியக் கட்சியான சிவ சேனா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நாடு முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்;  விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய தொடர் போராட்டம், மற்ற மாநில விவசாயிகளையும் போராட வைத்தது. முக்கியமாக, மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், மஹாராஷ்ட்ராவில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, தங்களின் ஒரு மாத சம்பளத்தை விவசாயிகளுக்காகக் கொடுப்பதாக, சிவசேனா கட்சியினர் உறுதியளித்துள்ளனர். இதையொட்டி, அந்தக் கட்சியைச் சேர்ந்த 21 எம்பி-க்கள், 63 எம்எல்ஏ-க்கள் உள்பட, கட்சியின் அத்தனை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை அளிக்க உள்ளனர். கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மட்டும் 10 லட்சம் ரூபாய் அளிப்பார் எனக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.