குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு- டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார், டி.டி.வி தினகரன். 


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி அ.தி.மு.க (அம்மா)உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். வி.கே சசிகலாவின் ஆணையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது, அ.தி.மு.க-வின் மூன்று அணிகளும் பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்கெனவே, பா.ஜ.க -வுக்கு 60 சதவிகிதத்துக்கு மேல் ஆதரவு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தினகரனும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

Dinakaran,admk

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!