மீரா குமாருக்கு ஆதரவளிக்கிறார் அ.தி.மு.க. ஆதரவு எம்எல்ஏ

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு எம்எல்ஏ-வான தமிமுன் அன்சாரி மீரா குமாருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். 


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதல் இரு கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவைக் கோரி வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, அதன் மூன்று பிரிவுகளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதாக முடிவு செய்தது.
இந்நிலையில்,  அ.தி.மு.க. ஆதரவு எம்எல்ஏ-வான  மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, காங்கிரஸின் வேட்பாளாரான மீரா குமாரை ஆதரிப்பதாக தெரிவித்தார். தலித் மக்களின் நலனுக்காத்தான் இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 


அதிமுக  மற்றும் அதன் ஆதரவு எம்எல் -க்கள்  சட்டசபையில் வாக்களிக்க பணம் பெற்றதாக  வீடியோ ஆதாரம் தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானதிலிருந்து ஆளும் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு எதிராக இவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த இவர், இன்று காலை பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்மானம் கொண்டுவரபட்டதற்காக தி.மு.க. செயல் தலைவரை சந்தித்து நன்றியும் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!