திரும்பிய இடமெல்லாம் சுவரொட்டிகள், எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்... என அடுத்த அறுவடைக்குத் தயாராகிவிட்டன கல்வி நிறுவனங்கள். அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கமான இது, கல்வி நிறுவனங்களுக்கான பொற்காலம். அட்மிஷன்களுக்கு கோடிக்கணக்கில் பணம் குவியும்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போல, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான பயிற்சிகளுக்கும் மாணவர்கள் பெரிய தொகையைக் கட்டணமாகச் செலவிடுவார்கள்.

இந்தச் சூழலில் பேனர், விளம்பரம் என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஒரு துளிக் கட்டணமும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பேராசிரியர் கனகராஜ். கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், மதியம் 2 மணிக்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கோவையில் மாநகராட்சி கட்டடத்தில் செயல்பட்டுவரும் உயர் கல்வி மையத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

மாலை நேரத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம்.

''ஸ்கூல்ல படிக்கும்போது இருந்தே நான் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அந்தக் கனவுலதான் படிச்சேன். ரெண்டு முறை நேர்முகத் தேர்வு வரை போய் ஐ.ஏ.எஸ். வாய்ப்பை இழந்தேன். அதில கிடைச்ச அனுபவம் மூலமாதான் இந்த இலவசப் பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்'' என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தார்.

''தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி என் சொந்த ஊர். பள்ளிப் படிப்பு தஞ்சாவூர்ல. கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் மேல் படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படிச்சேன். பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் படிச்சேன். அப்போது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களோ, புத்தகங்களோ இல்லை. இருந்தாலும், ரொம்ப தீவிரமா படிச்சேன். ரெண்டு முறை இன்டர்வியூ வரைக்கும்போய், ஐ.ஏ.எஸ். ஆகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டேன்.

அதுக்கு அப்புறம் அரசியல் அறிவியல் துறையில முனைவர் பட்டம் பெற்று, 1998-ல் கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியரா சேர்ந்தேன். நான் ஐ.ஏ.எஸ்-ஸுக்குப் படிச்சதைக் கேள்விப்பட்டு 2006-ம் ஆண்டுல எட்டு பேர் ஐ.ஏ.எஸ். படிப்புக்காக எங்கிட்ட வந்தாங்க. அவங்களுக்கு என் வீட்டுல வெச்சு இலவசமா கிளாஸ் எடுத்தேன். அதில் ரெண்டு பேர் ஐ.ஏ.எஸ். ஆனாங்க. ஒருத்தர் அஜிதா பேகம். தமிழகத்திலிருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண். இப்ப திருவனந்தபுரத்துல காவல் துறை துணை ஆணையரா இருக்கார். இதுவரைக்கும் எங்கிட்ட பயிற்சி பெற்ற 35 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுல ஜெயிச்சு, கலெக்டராகவும் காவல் துறை அதிகாரிகளாகவும் நாடு முழுக்க இருக்காங்க.

இதுக்கு அப்புறம் நிறைய பேர் எங்கிட்ட படிக்க வந்தாங்க. நாங்க இருந்தது வாடகை வீடு. நிறைய பேர் வந்ததால அங்கே அவங்களுக்கு கிளாஸ் எடுக்க முடியல. அதனால 2008-ம் வருஷத்துல இருந்து கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள எனது அறையிலேயே வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். கல்லூரி முடிந்த உடனும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சி எடுத்தேன். அங்கு பயிற்சி எடுத்தபோது 14 பேர் தேர்ச்சி பெற்றாங்க.

2011-ல கோவை மாநகராட்சி கமிஷனரா இருந்த அன்சுல் மிஸ்ரா, பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவர்கள் எல்லாம் கீழே உட்கார்ந்து படிக்கறதைப் பார்த்துட்டு, மாநகராட்சி கட்டடத்துல உயர் கல்வி மையக் கட்டடத்துல பயிற்சியைத் தொடங்கலாம்னு சொன்னாரு. 2011-ல இருந்து அங்கே பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். இப்போ ஜூனியர் பேட்ச், சீனியர் ஸ்டூடன்ஸ், அட்வான்ஸ்டு குரூப்னு மொத்தம் 300 பேர் எங்ககிட்ட படிக்கறாங்க. நாலு ஞாயிற்றுக்கிழமைதான் நான் விடுமுறை எடுத்திருக்கேன். அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தால்தான்.

இதுவரை என் பயிற்சி மையத்தில் படித்த பலர் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். நானே கலெக்டராகி இருந்தால்கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்'' என்று புன்னகைக்கிறார்.

தொடரட்டும் இவரது தூய பணி.

- ச.ஜெ.ரவி, படம்: தி.விஜய்