பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கைப்போலவே வருமானவரி வழக்கும் ஜெயலலிதாவின் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கியிருக்கிறது. 1997-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கும் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

இந்த வழக்கின் பின்னணி பற்றி பார்க்கலாம்...

1991 - 1996 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1991, 1992, 1993 ஆண்டுகளுக்கான தன்னுடைய வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. அந்த நேரத்தில், ஜெயா சசி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் நடத்திவந்தனர். அந்த நிறுவனத்தின் சார்பிலும் அவர்கள் எந்த வருமானவரிக் கணக்கையும் தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரையிலும், இதுதொடர்பாக அவருக்குப் பிரச்னை எழவில்லை. ஆனால், அவர் 1996-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு, 1997-ம் ஆண்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித் துறை இந்தப் பிரச்னையைத் தூசுதட்டி எடுத்து வழக்குத் தொடர்ந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பில், 'நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், ஒரு ரூபாய் மட்டும்தான் ஊதியம் பெற்றேன். அதனால் எனக்கு வேறு வருமானமே இல்லை’ என்று கூறி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வருமானமே இல்லாதபோது, வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதுபோல, ஜெயா சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்தும் எந்த வருமானமும் தங்களுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதற்குப் போதிய ஆதாரங்களை ஜெயலலிதாவால் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

''எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, விசாரணைக்கே உகந்தது அல்ல. எனவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அவர்களின் அந்தக் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், வருமானவரி வழக்கை முழுமையாக சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் இதே கோரிக்கையை முன்வைத்து மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் கொண்ட அமர்வு, ''வருமானவரித் தாக்கல் செய்யாதது தொடர்பாக சாட்டப்பட்டுள்ள குற்றத்தை, முழுமையான விசாரணையைச் சந்தித்தே தாங்கள் குற்றம் அற்றவர்கள் என எதிர் மனுதாரர்கள் நிரூபித்துக்கொள்ள வேண்டும். மாறாக, அது விசாரணைக்கே உகந்த வழக்கல்ல என்று முறையிடக் கூடாது. யாருக்கும் இதில் விலக்கு அளிக்க முடியாது. மேலும், 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய பொறுப்பும் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையை மூன்று மாதத்துக்குள் கீழ் நீதிமன்றம் (எழும்பூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றம்) முடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து கடந்த 20-ம் தேதி இந்த வழக்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, ''குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-வது பிரிவின்படி நீதிபதியின் கேள்வி - பதில் விசாரணை முடிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ள எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்'' என்று வாதாடினார். ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ''இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் சில விளக்கங்களைக் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளோம். அது வரும்வரை எங்களுக்குக் கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என்று கேட்டனர்.

ஆனால், நீதிபதி தெட்சிணாமூர்த்தி, ''நீதிபதியின் கேள்வி - பதில் கண்டிப்பாக விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர்களுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எனவே, ஏப்ரல் 3-ம் தேதி எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை அ.தி.மு.க-வின் கோட்டையாக்கிவிட வேண்டும் என்ற கனவில், தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தி சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் ஜெயலலிதா, ஏப்ரல் 3-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவரா?

- ஜோ.ஸ்டாலின்