பக்தர்களுக்கு திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் என்றால்... இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களுக்கு 21 இ, சுடலை மாடன் கோயில் தெரு. நெல்லை செல்லும் இலக்கியவாதிகள் அனைவரும் அந்த வீட்டுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள். அது தி.க.சி. என அழைக்கப்படும்

தி.க.சிவசங்கரனின் வீடு. புதிய இதழ்கள், புதிய நூல்கள், விவாதத்துக்குரிய கட்டுரைகள் என, எதைப் படித்தாலும் உடனே அதைப்பற்றிய சிறிய பாராட்டோ, விமர்சனமோ எழுதி அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார். இதனை தனது 90 வயது வரைக்கும் தடங்கல் இல்லாமல் செயல்படுத்திவந்த எழுத்தாளர் தி.க.சி., மார்ச் 25-ம் தேதி மறைந்துபோனார்!

தி.க.சி. என்று இலக்கிய உலகில் அன்போடு போற்றப்படும் தி.க.சிவசங்கரனை அடையாளப்படுத்துவது, இளம் படைப்பாளிகளை வளர்த்தெடுத்ததுதான். ஒவ்வொரு நாளும் அன்று வந்த இலக்கிய இதழ்களை காலையிலேயே படித்து முடித்துவிட்டு, தன்னைச் சந்திக்க வரும் இலக்கிய விருந்தினர்களிடம் விவாதிப்பதற்குத் தயாராகிவிடுவார். அவர் உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்த கடந்த சில நாட்கள் வரை இது தொடர்ந்தது.

கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன் போன்றோர்களுடனான நட்பு அவரை முற்போக்கு இலக்கிய முகாமுக்கு வழிநடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான 'தாமரை’யில் எழுதிவந்த அவர், பின்னர் அதன் ஆசிரியராகவும் ஆனார். 'சோவியத் நாடு’ இதழிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

நண்பர்களோடு சேர்ந்து அவர் நடத்திய நெல்லை புத்தக நிலையம், அன்றைய நாளில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமிக்கும் கூடம். ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முதன்முதலில் தமிழில் வெளியிட்ட பதிப்பகமும் அதுதான். வெளிநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற தாகம் அவருக்கு அதிகமாக இருந்தது. பாரதியார், புதுமைப்பித்தன் போன்றவர்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில், அவருடைய பங்கு முக்கியமானது.

கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகையாளர் என அவர் செயல்பட்ட அத்தனைத் துறைகளிலும் பொதுவுடமைத் தாக்கம் வெளிப்பட்டது. இலக்கியப் பணியோடு நிற்கவில்லை... தொழிற்சங்கவாதியாக இருந்தவர். ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் அவரைக் கொதிப்படைய வைத்தன. அப்போது அவர் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகப் புறப்பட்டார். சொந்தக் கட்சி மீதே விமர்சனங்கள் வைத்தார். கட்சி பார்க்காமல் அனைத்து படைப்பாளிகளிடமும் இருந்த நல்ல விஷயங்களைப் பாராட்டவும் அவர் தயங்கவில்லை. பல புதிய படைப்பாளிகளை அவர் கொண்டாடினார். அவர்களைப் பற்றிப் பேசினார். எழுதினார். அதையே அவருடைய வாழ்நாள் பணியாகச் செய்தார். எழுத்தாளர் வண்ணதாசன் அவருடைய இலக்கிய வாரிசு.

இவருடைய 'விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்’ என்ற தொகுப்பு நூலுக்கு 2000-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது.

இனி, 21 இ, சுடலை மாடன் கோயில் தெரு என்ற முகவரியில் இருந்து எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அஞ்சல் அட்டை வராது!

- தமிழ்மகன்