இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மீரா குமார்

 குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மீரா குமார், இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் பா.ஜ.க. அரசு, தனது வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அவர், கடந்த வாரம் ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களோடு தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். 
காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை தங்களது வேட்பாளராக அறிவித்தது. வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளான இன்று, மீரா குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல்செய்ய உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11.30  மணியளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்துள்ள கூட்டணிக் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!