ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய அடுத்த நாள் ஒரு அதிரடியை இலங்கை அரசு செய்தது. 'வெளிநாட்டுத் தீவிரவாதிகள்’ என்ற பெயரில் 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கையில் அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இந்த அமைப்புகள்தான் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகப் பல்வேறு நாடுகளில் போராடுபவர்கள். அந்தக் கோபத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்!

பிரித்தானியா தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழ் பேரவை, தமிழர் மறுவாழ்வு இயக்கம் உட்பட 16 அமைப்புகள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன.

இவற்றைப் புலிகளின் அங்க அமைப்புகளாகக் கூறியுள்ள இலங்கை, உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 28, 2011 அன்று அமெரிக்காவால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வைத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் காரணம் சொல்லப்பட்டுள்ளது.

ஐ.நா-வில் இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போதே இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரிய சின்கா, 'இலங்கை மீது தொடர்ச்சியாக ஐ.நா-வில் பாரபட்சமான பார்வையே இருக்கிறது. புலி தீவிரவாதிகளின் கையில் இருந்து மீண்ட பகுதிகள் இப்போது வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனாலும், இப்போதுகூட தீவிரவாத அச்சுறுத்தல் இலங்கையில் இருக்கிறது. கடந்த வாரம் கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புலிகள் அமைப்பு மீண்டும் கட்டமைக்கப்படுவதற்கான வேலைகளும் நடக்கிறது. போதுமான மீள்கட்டமைப்பு பணிகள் நடந்துவருகிறது. ஆனாலும், சர்வதேச விசாரணை இலங்கை மீது கொண்டுவரப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை வந்தால், இலங்கைக்கு தேவையற்ற அச்சுறுத்தல்களும் தேசத்துக்கு பாதுகாப்பின்மையும் ஏற்படும். அதனால் இந்தப் பரிந்துரையை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று பேசினார். தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்ததற்கான பிரதான காரணம் 'சர்வதேச விசாரணை’ என்பது இந்த வாதத்தைப் பார்த்தாலே புரியும் என்கின்றனர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அமைப்பினர்.

மேலும் அவர்கள், ''இது மட்டுமல்ல, இந்தத் தடைக்குப் பலவிதமான பின்புல காரணங்கள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏற்கெனவே இலங்கைக்கு செல்வதற்கு அஞ்சிக்கொண்டுள்ள நிலையில் இந்தத் தடை மேலும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து செல்லும் தமிழர்களின் வரவை நிரந்தரமாகத் தடுக்கும் அல்லது வருபவர்கள் அஞ்சி வராமல் இருக்கக்கூடும். இலங்கையிலிருந்து எந்த ஒரு கட்சி உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ, மனித உரிமை ஆர்வலரோ புலம்பெயர் நாடுகளில் இந்த அமைப்புகள் நடத்தும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கோ, கூட்டங்களுக்கோ செல்ல முடியாது. செல்லும் பட்சத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்.

2009 போரின் முடிவுக்குப் பிறகு, இந்த புலம்பெயர் அமைப்புகளும் மக்களும் செய்த வேலைகளே இன்று இலங்கையை சர்வதேச விசாரணையில் நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசு கருதுகிறது. இலங்கையின் மனித உரிமை அத்துமீறல்களையும் இன்றும் நடந்து கொண்டுள்ள அத்துமீறல்களையும் தொடர்ச்சியாகத் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் அந்தந்த நாடுகளில் இலங்கைக்கு எதிரான போராட்டங்களிலும் எடுத்துச் சொல்கின்றனர். அதைத் தடுக்கவே ராஜபக்ஷே அரசு தடை விதித்துள்ளது'' என்றும் சொல்கின்றனர்.

ஈழத் தமிழ் சமூகத்தை சொந்த மண்ணில் இல்லாமல் ஆக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே இந்தத் தடை என்பதே பரவலான கருத்து!

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

யார் தந்த அதிகாரம்?

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்துக்கு பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பாலுவும், அருளும் சென்று திரும்பியுள்ளனர். பாலுவிடம் பேசினோம். ''இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவந்தபோது, 'இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம். நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை’ என்று சொன்ன இந்திய அதிகாரி, நான்கு நிமிடங்களில் எப்படி தன்னுடைய முடிவை மாற்றினார்.

வெளியுறவுத் துறையில் இருந்து அவருக்கு உத்தரவு வந்ததா? அல்லது அவராகவே அந்த முடிவை எடுத்தாரா? அவருக்கு யார் அந்த அதிகாரத்தைத் தந்தது? இதில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் நிர்பந்தம் உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும். எனவே, நான் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன். ஏனென்றால், தற்போது இலங்கை மீது சர்வதேச விசாரணை உறுதியாகி உள்ளது.

அந்த விசாரணையை இலங்கை தன்னுடைய நாட்டில் நடத்த அனுமதிக்காமல் போகலாம். அந்த சமயத்தில் அந்த விசாரணை இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்றால், இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலைமை வகித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அது அதிகாரியின் முடிவா? அல்லது இந்திய அரசின் முடிவா? இதனை ஒரு குடிமகனாக தெரிந்துகொள்ளும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது'' என்றார்.

- ஜோ.ஸ்டாலின்