'நாற்பதும் நமதே... நாடாளுமன்றம் எனதே!’ என்றரீதியில் பெரிய கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்த நேரத்தில், பழைய வழக்குகளை வேகப்படுத்தி நீதிமன்றங்கள் ஜெயலலிதாவைத் துரத்துகின்றன. பதிலுக்கு நீதிமன்றங்களை சுற்றலில் விடுகிறார் ஜெயலலிதா!

கடந்த 17 ஆண்டுகளாக நடந்துவரும் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதா அன் கோ செய்த வேலைகள் இந்திய நீதிமன்ற வரலாற்றில் பல பக்கங்களைக் கொண்டவை. அதில் புதிய அத்தியாயம், சொத்துக்குவிப்பு வழக்கை முடிப்பதற்கு முன்பு, சொத்து முடக்கப்பட்ட வழக்கை முடிக்க வேண்டும் என்ற உத்தரவு.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற நேரத்தில், அவருடைய சொத்து மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய். 1996-ல் நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நேரத்தில், அவருடைய சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில் அவர் அரசாங்கத்திடம் இருந்து சம்பளமாகப் பெற்றுக்கொண்டது மாதம் ஒரு ரூபாய்தான். எனவே, 'ஜெயலலிதாவிடம் இப்போது இருக்கும் சொத்துக்கள் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டவை’ என்று சொல்லி, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. பிறகு, அதை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சிறப்பு நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட்டது. இதில் ஒரு கிளைக் கதையும் உள்ளது. 'வருமானத்துக்கு அதிகமாக முறைகேடான வழிகளில் சாம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் மட்டும் போதுமா? அவற்றை முடக்க வேண்டாமா?’ என்று நினைத்த தமிழக அரசு 2008-ம் ஆண்டு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதன்படி, சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயா சசி என்டர்பிரைசஸ், ஜெயா சசி டெவலப்பர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட 22 சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தது.

இதை இங்கேயே நிறுத்திவிட்டு, மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்குக்குப் போகலாம். சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதா 'எனக்கு தொண்டை கட்டியிருக்கிறது; வழக்கறிஞரின் உறவினர் இறந்துவிட்டார்; ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகள் புரியவில்லை; தமிழ் மொழிபெயர்ப்பில் எழுத்துப்பிழைகள் உள்ளன; நிறைய வேலைகள் இருப்பதால், கேள்விகளை வீட்டுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும்; வழக்கை விசாரிப்பவர் அந்தப் பதவிக்கே லாயக்கற்றவர்’ என்று விதவிதமாக காரணங்களைச் சொன்னார். இப்படி இழுத்தடிப்பதற்காக ஜெயலலிதா தரப்பு மனு மேல் மனு போட்டது.

அரசு வழக்கறிஞர் ஆச்சாரியாவுக்குக் கொடுக்கப்பட்ட குடைச்சல்களால் வெறுத்துப்போனவர், 'என்னுடைய மீதமுள்ள வாழ்நாட்களை அமைதியாக கழிக்க விரும்புகிறேன். எனவே, நான் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று புலம்பிவிட்டுச் சென்றார். அதன் பிறகு, தங்கள் வழக்கை விசாரிக்க அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார். குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு யார் வழக்கறிஞராக இருக்கலாம் என்பதை முடிவுசெய்யலாம். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ஆனால், தனக்கு எதிராக இந்த வழக்கறிஞர்தான் ஆஜராகி வாதாட வேண்டும் என்று கேட்ட விநோதம் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில்தான் நடைபெற்றது.

ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த பாஸ்கரன், அரசு கருவூலத்தில் இருந்து 55 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அனுமதி பெற்று எடுத்துச் சென்றிருந்தார். அதனைத் திருப்பி ஒப்படைத்த பிறகே இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தானே முன்வந்து சேர்ந்துகொண்ட தி.மு.க. வழக்கறிஞர் தரப்பினர், பாஸ்கரனின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதன் பிறகும் விடாமல், 'அவர் கொண்டுபோன பொருள்கள் வந்த பிறகுதான் வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்று மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தனர். அதில், ஆஜராகி சாட்சி சொன்ன பாஸ்கரனின் வாரிசு, அந்தப் பொருள்கள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில்தான் உள்ளன என்று சொன்னார். அதோடு அந்த மனு முடிவுக்கு வந்தது.

இதுபோன்ற அனைத்து தடங்கல்களையும் கடந்து, வழக்கில் தீர்ப்பு வரவேண்டிய நேரத்தில்தான், சொத்து முடக்கம் தொடர்பான வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், 'முடக்கப்பட்ட சொத்துக்களில் பல சொத்துக்களுக்கும் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயலலிதா, சசிகலா தவிர்த்த மற்ற பார்ட்னர்கள் தரப்பை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்காமல் சொன்ன தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்துசெய்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் தரப்பை அறிய வேண்டும். அதன் பிறகுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கில் தொடர்புடைய கிளை வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இப்போது அதில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது எதுவும் சிறப்பு நீதிமன்றத்துக்குத் தெரியாமல் நடந்துள்ளது வேடிக்கை.

இதற்கிடையில், வருமானவரி செலுத்தாத வழக்கில் வருகிற 10-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். இதுவும் ஜெயலலிதா 1991, 92, 93 ஆகிய மூன்று ஆண்டுகளில் தன்னுடைய வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாததால் தொடரப்பட்ட வழக்குத்தான். அதில் என்ன செய்து சுற்றவிடப்போகிறார் என்பது தெரியவில்லை.

அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியினர், 'சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு இன்னும் தீர்ப்பு வரவில்லை. அத்துடன் 66 கோடி தொடர்பான வழக்கை இவர்களாக இன்றைய மார்க்கெட் வேல்யூ போட்டு தவறாகப் பிரசாரம் செய்கிறார்கள். எனவே, மாற்று கட்சியினர் பிரசாரத்தில், பெங்களூரு வழக்குப் பற்றிப் பேசக் கூடாது’ என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். 'டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அதை அனுப்பி உள்ளோம். அவர்தான் அதில் முடிவெடுப்பார்’ என்று சொல்லியிருக்கிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்.

ஊர் ஊராகச் சுற்றிச் சுழன்று வாக்குகளைச் சேகரித்து வருகிறார் ஜெயலலிதா. ஆனால் அவரை வழக்குகள் சுழன்று இறுக்க ஆரம்பித்துள்ளன!

- ஜோ.ஸ்டாலின், படம்: சு.குமரேசன்

இது கருணாநிதி சொன்ன கணக்கு!

கோவையில் கருணாநிதி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அங்கு ஜெயலலிதாவின் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய கருணாநிதியின் பேச்சுக்குத் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு.

''வாலாஜாபாத்தில் ஜெ. தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். அதன் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.

நீலாங்கரையில் உள்ள 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.

காஞ்சிபுரத்தில் உள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள 1,167 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.

பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய்.

கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய். சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே ஜெயலலிதா வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய். சந்தை மதிப்பு 4,500 கோடி ரூபாய்.

கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளக்குளம் பகுதியில் 1,190 ஏக்கர், ரெவரோ அக்ரோ ஃபார்ம் பெயரில் 100 ஏக்கர், 30 வண்ணங்களில் பலவிதமான கார்கள், டிரக்கர்கள், ஹைதராபாத்தில் பழைய திராட்சைத் தோட்டம் இவைகள் எல்லாம் சேர்த்து 5,107 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள். இது நான் சொல்வதல்ல. நாங்கள் எழுதி படிப்பதல்ல. இவையெல்லாம் அம்மையாரின் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியங்கள் தெரிவித்துள்ள விவரங்கள். இவை தவிர, நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்களையும் கணக்கில் சேர்த்தால், மேலும் பல கோடி ரூபாய் சேரும்.

அதாவது ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட, 310 மடங்கு அதிக சொத்துக்களை ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறார்'' என்று பட்டியலிட்டார் கருணாநிதி.

- ஞா.சுதாகர்