570 கோடி பணம் யாருடையது? - சிபிஐ முக்கிய அறிக்கை தாக்கல் | 570 crore money seized belong to bank only, says CBI

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (04/07/2017)

கடைசி தொடர்பு:14:32 (04/07/2017)

570 கோடி பணம் யாருடையது? - சிபிஐ முக்கிய அறிக்கை தாக்கல்

கடந்த வருடம் தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், திருப்பூர் அருகே மூன்று லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது. இந்தப் பணம் குறித்து தி.மு.க சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இன்று உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ.  "திருப்பூரில் கைப்பற்றப்பட்ட பணம் 570 கோடியும் வங்கிப் பணமே என்றும், அந்தப் பணம் கோவையிலிருந்து  விசாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது" என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது