எந்த பேச்சும் நடக்கவில்லை! அமைச்சர் ஜெயக்குமாரை விளாசிய கே.பி.முனிசாமி

"அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை கே.பி.முனுசாமி மறுத்துள்ளார்.  

kp Munusamy


பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று காலை பேட்டி அளித்திருந்தார். இதுபற்றி இன்று சென்னையில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "பேச்சுவார்த்தை நடப்பதாக ஜெயக்குமார் கூறியது தவறு. இரண்டு அணிகளும் இணைவதற்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதை ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

ஜெயக்குமாரின் கருத்து பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனது கவனத்துக்கு எதுவும் வரவில்லை என்று கூறினார். ஜெயக்குமாரின் கருத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மறுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!