வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:34 (04/07/2017)

`LETTER PAD' அரசியல்வாதிகளின் பீலா அறிக்கைகளும் வாக்குறுதிகளும்! | Jai Ki Baat

இப்போது, தெருவுக்குத் தெரு `Letter Pad' கட்சிகள் முளைத்துவிட்டன. யார் இவர்கள்... அரசியலுக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? 

`வாழ்வா... சாவா கட்சி', `பொதுக்கட்சி', `காதலர் கட்சி' என விநோதமான பெயர்களைத் தேடிப் பிடிப்பதிலிருந்து வீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தருவது,  தனி மனிதர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என அறிக்கைவிடுவது வரை லெட்டர் பேடு கட்சிகளின் அட்ராசிட்டி வேற லெவல்! 

தமிழ்நாட்டில் இருக்கும் லெட்டர் பேடு கட்சிகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைக்கவும், ஆதரவு கொடுத்து அடுத்த எலெக்‌ஷனுக்காக இப்போதே துண்டைப் போட்டு வைக்கவும் அவர்கள் படும்பாடு பெரும்பாடுதான்!

ஆனால், லெட்டர் பேடு கட்சிகளை நடத்துவது சாதாரண விஷயமா என்ன?  

கொள்கைகள் வித்தியாசமாக இருக்க வேண்டும், கட்சியின் பெயரும் கொடியும் விநோதமா இருக்க வேண்டும், `பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு குடிமகனின் செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்' மாதிரியான அதகள கொள்கைகளைச் சொல்லி மக்களை நம்பவைக்க வேண்டும். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு பாஸ்... நீங்களே கேளுங்க! 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க