மேகதாது அணை விவகாரம்: உமா பாரதிக்கு முதல்வர் கடிதம்

காவிரி ஆற்றின்  குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடகாவின் முடிவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொழிநுட்ப அனுமதி மற்றும் முழுத் திட்ட அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது கர்நாடக அரசு. இந்தத் திட்டத்தில், கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்குக் கடிதம்மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் அவர், "கர்நாடக அரசு தமிழ்நாட்டைக் கலந்தாலோசிக்காமல் முழுத் திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது. இது ஏற்கெனவே வெளியான தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அதனால், தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல் மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது" என்று கூறியுள்ளார். 

தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒப்புதலுக்காக, கர்நாடக அரசு தமிழகத்தைக் கேட்காமல் மனு ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்புதலை காவிரிப் பிரச்னை முடியும் வரை வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே, இது குறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் குறித்தும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!