Published:Updated:

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி: தமிழக அரசுக்கு அனுமதி!

Vikatan Correspondent
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி: தமிழக அரசுக்கு அனுமதி!
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி: தமிழக அரசுக்கு அனுமதி!
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி: தமிழக அரசுக்கு அனுமதி!

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக  அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது தமிழகத்தின் அணை பராமரிப்பு பணியாளர்களை கேரள அரசு  அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிமன்றம்,மத்திய நீர்வளத் துறை  மேற்பார்வையாளர் முன்னிலையில்,இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கூறியுள்ளது.

மேலும் நீதிபதி ஆனந்த் கமிட்டியின் ஆய்வறிக்கையை கேரளாவுக்கு வழங்க வேண்டும்  என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற  ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டது.