Published:Updated:

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!
இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது.


புதுடெல்லியில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள், சீன எல்லை விவகாரம், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், ஜிஎஸ்டி வரி எனப் பல முக்கிய விஷயங்கள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. 

எனினும் முக்கியமாக, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்தும் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டம், ஜிஎஸ்டி அமல், சீனா எல்லை விவகாரம், அமர்நாத் தாக்குதல் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்குப் பிறகு, நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இந்தக் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு