'சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது'- 'திருமா'வுக்கு, பொன்னார் அட்வைஸ்

எந்த ஒரு செயலையும், முதலில் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 


மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடு நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளை அறிந்தவர். நாடு முழுவதும் அவரது பாதம் படாத இடமே இல்லை என்கிற அளவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது அது, தென்னிந்தியாவுக்குக் கூடுதல் பலமாக அமையும்" என்றார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டது குறித்து திருமாவளவன் கூறியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவர் அப்படிக் கூறியிருந்தால், அவரது கருத்து துரதிர்ஷ்டமானது. எதையும் முதலில் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. ஜனாதிபதி என்பது நாட்டின் முதல் குடிமகன். அவர்கள் சாதியால் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. திறமையை வளர்த்துக் கொண்டார்கள், அதற்கான தகுதி இருப்பதாலேயே அவர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தக்கூடது" என்று பதிலளித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!