வைரலான சசிகலாவின் சிறை வீடியோ... என்ன சொல்கிறார் டி.டி.வி. தினகரன்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி, அவருக்குத் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை போலீஸ் டிஐஜி., ரூபா அதிரடி புகார் கூறியிருந்தார்.


இந்த நிலையில், நேற்று சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்றும் சிறையில் எந்தக் கெடுபிடியும் இல்லாமல் இருப்பது போன்றும் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் செம வைரலானது.  இன்று, சென்னை அடையாற்றில் உள்ள வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், "சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. அவர் ஷாப்பிங் செய்துவிட்டு வருவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இதன்மூலம், சிறையில் இருப்பவர்களை தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்" என்றார். ஏற்கெனவே, அ.தி.மு.க. அம்மா அணியினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவருகின்றனர். நேற்று இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகேழந்தி, வெளியான  வீடியோ, கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை என்றார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!