Published:Updated:

பிரமாண்ட உலகின் எளிய மனிதர்!

பிரமாண்ட உலகின் எளிய மனிதர்!

பிரமாண்ட உலகின் எளிய மனிதர்!

பிரமாண்ட உலகின் எளிய மனிதர்!

Published:Updated:

இயக்குநர் ராம.நாராயணன் மறைவு திரையுலகத்தினருக்கே அதிர்ச்சியான செய்தி. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த விஷயமே பலருக்கும் தெரியாது.சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டுவந்த ராம.நாராயணன் ஒரு வருடத்துக்கு முன்பு சிங்கப்பூரில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக் கொண்டார். அதன்பின் வெளியில் அதிகம் நடமாடினால் கிருமிகள் தாக்கக்கூடும் என்பதால் பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

பிரமாண்ட உலகின் எளிய மனிதர்!

ஜூ.வி-யில் இடம்பெறும் 'செய்தியும் சிந்தனையும்’ பகுதிக்குப் பேசுவதற்குக் கேட்டபோது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு தனது வீட்டிலேயே பேசிக்கொடுத்தார். அப்போது சிறுநீரக ஆபரேஷன் குறித்து நீண்ட நேரம் நம்மிடம் பேசினார். ''ஆபரேஷன் பண்ணிட்டதால அது செட் ஆகிற வரைக்கும் வீட்டைவிட்டு வெளியில வரவில்லை. இப்போ உடம்பு ஏத்துக்கிட்ட மாதிரி இருக்கு. சாப்பாட்டு விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும். மெள்ள சினிமா நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கணும்'' என்று நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டார். ஆனால் அவரது நம்பிக்கையை நோய் தோற்கடித்துவிட்டது. கடந்த 22-ம் தேதி சிங்கப்பூரில் இறந்து போனார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரைக்குடியில் இருந்து சினிமா பாடல் எழுதுவதற்காக சென்னைக்கு வந்தவர், இயக்குநர் ஆனார். அடுத்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளர் ஆனார். தமிழ், தெலுங்கு, போஜ்புரி, வங்காளம் என்று எல்லா மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். 1-ம் தேதி பூஜை போட்டு, 24-ம் தேதி படத்தையே முடித்து... குறைந்த லாபம் வைத்து விநியோகஸ்தர்களிடம் விற்றுவிடுவார். இப்படி ஒரு கார்ப்பரேட் ஸ்டைலை முதன்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர். 'அவதார்’, 'காஞ்சனா’ படங்களை தமிழ்நாடு முழுக்கத் திரையிட்டு வெற்றிகரமாக ஜெயித்த விநியோகஸ்தர்.

நடிகர் ராமராஜன் இவரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். நடிகர் அர்ஜுனை 'சிங்கக்குட்டி’ திரைப்படம் வாயிலாக அறிமுகம் செய்தவர். 'சுமை’ படத்தில் வாகை சந்திரசேகரை குணச்சித்திர ஹீரோவாக்கியவர். 'சிவப்பு மல்லி’யில் விஜயகாந்த்துக்கு வீறுகொண்ட கதாபாத்திரத்தைக் கொடுத்தவர். கருணாநிதியின் கோபாலபுர வீட்டின் அடுப்பறை வரை செல்லும் அளவுக்கு உரிமை படைத்தவர்.

சாதுவான இயல்புகொண்ட ராம.நாராயணன், சாண்டோ சின்னப்பா தேவருக்குப் பிறகு யானை, ஆடு, பாம்பு, குரங்கு போன்ற விலங்குகளை நடிக்க வைத்தவர். அப்போது சிலர் விளையாட்டாக மிருகங்களைவைத்து அவர் எடுக்கும் படங்களை விமர்சனம் செய்தனர். அதற்கு நாராயணன், ''யானை, பாம்பு, குரங்கு எல்லாத்துக்கும் மேக்கப்மேன் தேவை இல்லை. பேட்டா வேண்டாம். இவை கேரவன் கேட்பது இல்லை. எல்லாத்துக்கும் மேல் சில நடிகர், நடிகைகள் மாதிரி ஏகப்பட்ட டேக் வாங்கி ஃபிலிமை வேஸ்ட் பண்ணுவது இல்லை'' என்று பதிலடி கொடுத்தார்.

கையைச் சுட்டுக்கொள்ளாத சினிமா வியாபாரம்தான் அவருடைய பாணி. தமிழ் சினிமா வரலாறு நிச்சயம் அவருக்கு ஓர் எளிய சிம்மாசனத்தைப் போட்டு வைக்கும்.

- எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism