நாங்கள் எதையும் மறைக்கவில்லை - கமலுக்கு அமைச்சர் பதில்

'டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை' என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

vijayabaskar


சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது ,"தீ விபத்தில் காயம்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எல்லா வகையான  வசதிகளும் அரசு மருத்துவமனையில் உள்ளன. தனியார் மருத்துவமனையிலிருந்தும் அரசு மருத்துவமனைக்கு சிலர் வந்துள்ளார்கள். நான்கு பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நடிகர் கமல், டெங்கு காய்ச்சல்குறித்து கூறியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "தமிழக அரசு எதையும் மறைக்க வில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக்  குறைந்துவருகிறது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுடனும் இணைப்பில் இருக்கிறோம். காய்ச்சல் என்று யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாலும் 24 மணி நேரத்துக்குள்ளாக அவர்களுக்கு பரிசோதனைசெய்து, காய்ச்சலின் தன்மைகுறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!