Published:Updated:

பி.எம். பிரைன் டீம்!

பி.எம். பிரைன் டீம்!

பி.எம். பிரைன் டீம்!

நரேந்திர மோடிக்கு பிரதமர் பதவி மட்டுமல்ல, டெல்லியும் புதுசு. யார் அவருக்கு அனுசரணையாக இருந்து அனைத்துக்கும் உதவி செய்கிறார்கள்? அவரது பிரைன் டீம் பயோடேட்டா இது! பிரதமர் அலுவலகத்தில் இப்போது இருக்கும் பலரும் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்களே! முதல்வராக இருந்தபோது தனக்கு சமையல்காரராக இருந்தவரையே டெல்லிக்கு அழைத்துப்போயிருக்கும் மோடி தன் உதவியாளர்களை விட்டுவிடுவாரா என்ன? அரவிந்த் ஷர்மா, ஓம் பிரகாஷ் சிங், தினேஷ் தாக்கூர், தான்மே மேத்தா ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இப்போது மோடியின் கண்களாகவும் காதுகளாகவும் கரங்களாகவும் இருக்கும் ஐந்து பேர்களைப் பற்றி இங்கே...

பி.எம். பிரைன் டீம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிருப்பேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் (பிரின்சிப்பல் செக்ரட்டரி): அதிகாரம் மிக்க இந்தப் பதவிக்கு மிஸ்ராவை மோடி தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம், இவரது திறமைமையும் அனுபவமும்தான். மிஸ்ரா, அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்தவர். என்றாலும், உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்த கல்யாண் சிங் தொடங்கி, ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா என்று பலரோடு பணிபுரிந்தவர். அதனால், உத்தரப்பிரதேசத்தின் ஜாதகம் முழுவதையும் அறிந்தவர். மோடியின் அடுத்த இலக்கு உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி ஆட்சிதானே. அதனால் உ.பி அறிந்த மிஸ்ராவை தன் அருகில் வைத்துக்​கொண்டார்.

உலக வர்த்தக அமைப்போடு (WTO) இந்தியாவின் சார்பாக பலகட்ட பேச்சுவார்த்​தைகள் நடத்தியவர் இந்த மிஸ்ரா. உல​களாவிய பொருளாதார சூட்சுமங்கள் அனைத்தும் அத்துபடியானவர்.

பி.எம். பிரைன் டீம்!

பி.கே மிஸ்ரா, கூடுதல் முதன்மைச் செயலாளர்: பிரதமரின் அலுவலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இரண்டாவது மிஸ்ராவான இவருக்கும் மோடிக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. கூடுதல் முதன்மைச் செயலாளர் என்ற பதவி இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இல்லை. அரசு உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவருக்காகவே பிரத்யேகமாக இந்தப் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 'மோடியின் மௌனத்தைக்கூட மொழிபெயர்த்துச் செயல்படுத்தக் கூடியவர் இவர்’ என்கிறார்கள் டெல்லியில்!

'ஸ்வீட் எடு... கொண்டாடு':

பி.எம். பிரைன் டீம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆவணங்களை தயார் செய்வதற்கு முன்பு இனிப்பு தயாரிப்பது டெல்லியில் ஐதீகங்களில் ஒன்று. ஜூலை 10-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அதற்கு முன்னதாகக் கடந்த 1-ம் தேதி மாலையில்  நிதித் துறை அதிகாரிகளோடு அமைச்சர் கிண்டுகிறார் 'அல்வா’!

பி.எம். பிரைன் டீம்!

அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: உலக அரசியல் சதுரங்கத்தில், நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நகர்த்தப்படும் காய்கள் ஒவ்வொன்றின் அசைவும் மோப்பம் பிடிக்க வேண்டியது முக்கியமான ஒரு வேலை. நமது நாட்டின் உளவு நிறுவனமான ஐ.பி-யில் பணிபுரிந்தபோது, உயிரை பணயம் வைத்து அண்டை நாடுகள் பற்றிய ராணுவ ரகசியங்களை மோப்பம் பிடித்துக் கொண்டுவந்த அனுபவம் கொண்டவர் இவர். மாறுவேடத்தில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அந்த நாட்டில் நான்கு ஆண்டுகள் வேறு பெயரிலும் வாழ்ந்து, அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களை நம் நாட்டுக்கு அனுப்பிய தரைப்படை வீரர். ராணுவத்திலேயே யாரும் செய்ய முற்படாத விஷயங்களை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய வேகமும் துணிவும் கொண்ட இவருக்கு வயது 69.

பி.எம். பிரைன் டீம்!

ராஜீவ் தொனோ, தனி உதவியாளர்: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் இந்த ராஜீவ் வேலை பார்த்திருக்கிறார். என்றாலும், இந்த 40 வயது ஐ.ஏ.எஸ் அதிகாரியை மோடி தன் தனி உதவியாளராக வைத்திருக்கிறார். பீகாரைச் சேர்ந்த இவர், குஜராத்தில் புஜ் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டபோது, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். அப்போது இவர் மீது ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றாலும், பின்பு தொழில் முதலீட்டை குஜராத் மாநிலத்துக்கு ஈர்க்கும் iNDEXTb அமைப்பில் திறம்பட வேலை செய்ததால் மோடியின் அபிமானத்தைப் பெற்றார்.  

பி.எம். பிரைன் டீம்!

ஜெகதீஷ் தக்கார், மக்கள் தொடர்பு அதிகாரி: குஜராத்தில் மோடி முதல் வராக இருந்த காலத்தில் இருந்தே அவருடைய மக்கள் தொடர்பு அதிகாரி. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே மோடிக்கும் 70 வயதான தக்காருக்கும் நல்ல பழக்கம் என்பதால், இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட இவரை மோடி தன்னுடனேயே வைத்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு சார்டட் அக்கவுன்டன்ட். ஸ்டாக் மார்கெட்டில் புகுந்து விளையாடுபவர். இவரது பங்களிப்பை முக்கியமானதாகக் கருதுகிறார் மோடி!