Published:Updated:

தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

ஸ்ரீரங்கம் சீர்மிகு அரங்கமாக மாறிக் கொண்டு இருக்​கிறது!

கொள்ளிடக் கரை, பஞ்சக்கரை சாலை அருகே உள்ளது யாத்ரி நிவாஸ். திருவானைக்காவல், சமயபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் இங்கே தங்கிச் செல்லலாம். திருப்பதி போன்ற பிரபல கோயில்களில் உள்ளதைப்போல பிரமாண்ட கட்டடம்.

''கொள்ளிட ஆற்றில் குளித்துவிட்டு ரங்கநாதரைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கிறது. அதனால்தான், பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்களின் வசதியை மனத்தில் வைத்து முதல்வர் செயல்படுத்தி​யது​தான் யாத்ரி நிவாஸ். ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கிச் செல்லலாம். காலங்காலத்துக்கு முதல்வர் பெயரை பக்தர்கள் உச்சரிப்பார்கள்'' என்கிறார் சுந்தர் பட்டர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

ஸ்ரீரங்கத்துக்கு வருகிற வெளியூர் பக்தர்கள் திருச்செந்தூர், பழநி, திருப்பதி என்று பிரபல கோயில்களுக்கு இங்கிருந்தே செல்லும் வகையில் 35 பஸ்களை விட்டிருக்கிறார்கள். கோயிலில் தினமும் 2,500 நபர்களுக்கு அன்னதானம் நாள் முழுவதும் போடப்படுகிறது. புதிய நவீன அன்னதானக் கூடம் ரெடியாகி வருகிறது. சிங்கப்பெருமாள் கோயிலில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அம்மா மண்டபப் படித்துறையில் குளித்துவிட்டு ராஜ கோபுரம் வரை பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, மேற் கூரையுடனான நடைபாதையை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்துக்கொடுத்திருக்கிறார் முதல்வர். 'நம்ம டாய்லெட்' என்கிற பெயரில் மூன்று இடங்களில் நவீன முறையில் அமைத்திருக்கிறார்கள். மிகவும் சுத்தமாகக் காணப்படும் இந்த டாய்லெட்கள் வெளியூர் பக்தர்களை மிகவும் கவர்ந்துள்ளது.  

தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்குள் காலடி எடுத்து வைத்தால், பிரபல தனியார் மருத்துவமனைக்குள்

தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

நுழைந்ததைப்போன்ற பிரமை. அதி நவீன மருத்துவ உபகரணங்கள், ஸ்கேனிங் மிஷின் என்று அமர்க்களப்பட்டது. இனாம் குளத்தூரில் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மணிகண்டம் யூனியனில் தேசிய சட்டப்பள்ளி செயல்படுகிறது. சேதுராப்பட்டியில் இன்ஜினீயரிங் கல்லூரி அமைக்கப்​பட்டுள்ளது. மகளிருக்காக மணிகண்டம் யூனியனில் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போகிறது. ஸ்ரீரங்​கத்​துக்கு என்று பஸ் ஸ்டாண்ட், கோர்ட், சிப்காட் வளாகமும் வரப்​போகி​​றதாம்.  

வெளிநாடுகளில் உள்ள 'தீம்' பார்க் மாதிரி ஸ்ரீரங்கத்தின் ஆற்றங்​கரையில் பட்டர்ஃபிளை பார்க் ஒன்றை நிறுவச் சொல்லியிருக்கிறார் முதல்வர். இன்னும் ஒரு வருடத்தில் திறக்கப்படுமாம். காவிரி ஆற்றில் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் காவிரி நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதனருகே பூங்கா அமைத்து சம்மர் பீச் இடமாக மாற்றிவருகிறார்கள். காவிரியில் தண்ணீர் வரும்போது, இந்தப் பகுதி மக்கள் பொழுதுபோக்க இப்போதே வர ஆரம்பித்துவிட்டனர். பஞ்சக்கரையில் வீடு இல்லாதவர்களுக்கு 356 குடியிருப்புகள் கட்டப்பட்டு ரெடியாக இருக்கின்றன.

கடந்த மூன்று வருடத்தில் சுமார் 453 கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் முதல்வர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துசென்ற பக்தர் ஒருவர் பஸ் ஏறும்போது, ''தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் போல் ஆகுமோ?'' என்று சலித்துக்கொண்டார். இந்தக் கேள்வியை அந்த வட்டாரத்து அ.தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''இவை ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் தமிழக மக்கள் அனைவருக்கும் பயன்படுவது மாதிரித்தான் உருவாக்கப்பட்டுள்ளது'' என்று சமாதானம் சொன்னார்.

ஸ்ரீரங்கம் போல மொத்த தமிழ்நாடும் மாறினால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கத்தானே செய்யும்!?

தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?
தமிழ்நாடு எப்போது ஸ்ரீரங்கம் ஆகும்?

- பாலகிஷன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,

பா.கந்தக்குமார், எம்.திலீபன்