Published:Updated:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - அய்யாக்கண்ணு சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - அய்யாக்கண்ணு சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - அய்யாக்கண்ணு சந்திப்பு

டெல்லியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு சந்தித்தார்.

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தி, பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். காலை 11 மணியளவில் பழனிசாமி, மோடியைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.


இதனிடையே, பயிர்க்கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்; வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்; நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள், டெல்லியில் இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்காக தமிழ்நாடு இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர். "முதல்வர் தங்களைச் சந்திக்க மறுத்தால், தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவோம்" என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு சந்தித்துள்ளார்.