Published:Updated:

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிறாரா அமித் ஷா?

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிறாரா அமித் ஷா?
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிறாரா அமித் ஷா?

பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான அமித் ஷா, குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களைவைக்கு எம்.பி ஆக தேர்வுசெய்யப்பட உள்ளார். 


அமித் ஷா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பெரிய மாநிலமான உ.பி-யில், பா.ஜ.க அபார வெற்றியைப் பெற மூளையாகச் செயல்பட்டவர். பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்னர், கட்சியின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் நெருங்கிய நண்பர்கள். தேசியத் தலைவராக பல மாநிலங்களில் கட்சி வெற்றிபெற, வியூகங்களை வகுத்தவர். 

தற்போது, குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதில், ஏற்கெனவே அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மற்றொரு இடத்துக்கு, அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அறிவித்தார்.

நடப்பு கூட்டத்தொடர் முடிவடைந்ததும் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, அமைச்சர்கள் ஒன்றுக்கு இரண்டு துறைகளைக் கூடுதலாகக் கவனித்துவருகிறார்கள். வரும் புதிய அமைச்சரவையில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  நிதி அமைச்சர் ஜெட்லி, கூடுதலாக பாதுகாப்புத்துறையையும் கவனித்துவருகிறார். எனவே, அமித் ஷா எம்.பி-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவருக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.