வெளியிடப்பட்ட நேரம்: 23:02 (29/07/2017)

கடைசி தொடர்பு:23:02 (29/07/2017)

ஸ்டாலின் வெளியிட்ட கருணாநிதியின் புதிய புகைப்படம்!

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நல குறைவால் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். அவர் எந்த வெளி நிகழ்வுகளிலும், கட்சி நிகழ்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. கடந்த சட்டமன்ற கூட்டதொடரிலும் கலந்துகொள்வதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 

karunanithi


இந்நிலையில் இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்து, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் முரசொலி பத்திரிக்கையின் பவள விழா அழைப்பிதழை வழங்கி உள்ளார். இது குறித்த தகவலை ஸ்டாலின் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பகிர்த்து உள்ளார். இந்த சந்திப்பில் கழக பொதுசெயலாளர் அன்பழகனும் இருந்தார். 

சமூக வலைதள குறிப்பில் ஸ்டாலின், "எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முரசொலி பவளவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழை தலைவர் கலைஞர் அவர்களுக்கும், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் வழங்கினேன்" என்று கூறியுள்ளார். இந்த பவளவிழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சில நாட்களுக்கு பிறகு கருணாநிதியின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.