டி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும் | ADMK wants government to restrain Roopa from giving interviews to press

வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (01/08/2017)

கடைசி தொடர்பு:10:24 (01/08/2017)

டி.ஐ.ஜி ரூபா ஊடகங்களுக்குப் பேசத் தடை விதிக்க வேண்டும்

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அங்கு சகல வசதிகளுடன் இருப்பதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். அதுபோன்ற சில வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பரவின.

புகழேந்தி


அதன் பின்னர் ரூபா, போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டார். பிறகு, சசிகலாகுறித்து ஊடகங்களில் தொடர்ந்து பேட்டியளித்துவந்தார். இந்நிலையில், நேற்று கர்நாடக அ.தி.மு.க தலைவர் புகழேந்தி, கட்சியின் சார்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். 
அதில்,  "ரூபா தனது விளம்பரத்துக்காகத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசி வருகிறார். அவ்வாறு பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அவர், சசிகலாகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும். அதையும் மீறி தொடர்ந்து பேசிவந்தால், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். " போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடக முதல்வருக்கு கோரிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.