முதல்வருடன் தினகரன் ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு!

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித் தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது முதல்வரை தினகரன் ஆதரவாளர்கள் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

palanisamy


ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வரும் 5-ம் தேதி வரயிருப்பதாகவும் தொண்டர்கள் அனைவரும் வரவேண்டும் என்று தினகரன் அழைப்புவிடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், இரு அணிகளும் இணைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8 அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். பன்னீர்செல்வமும் தன் ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். பொன்னையன், மதுசூதனன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்நிலையில்,  தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்ச் செல்வன் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வரைச் சந்திக்க தலைமைச் செயலகம் வந்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!