கூவத்தூர் பாணியில் குஜராத் எம்.எல்.ஏ-க்கள்! கர்நாடக ரிசார்ட்டில் ஐ.டி ரெய்டு

குஜராத் மாநில காங்கிரஸ்  எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் விதமாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

Karnataka resort

குஜராத் மாநிலத்தில், வரும் 8-ம் தேதி, மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ்  எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மீதம் இருக்கும்  எம்.எல்.ஏ-க்களிலும் சிலர் கட்சி தாவலாம் என்று பேசப்பட்டது.  இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தலுக்குதான் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 இந்நிலையில், இன்று காலை முதல் குஜராத் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோன்று, கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சர் டி.கே சிவகுமார்  வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம், கர்நாடக மற்றும் குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Photo Credits : ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!