நோட்டாவுக்கு வாக்களித்தால் தகுதிநீக்கம் - காங்கிரஸ் 'திடீர்' கோரிக்கை

'மாநிலங்களவைத் தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. 

congress

குஜராத் மாநிலத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க சார்பில், மூன்று  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அந்தக் கட்சி. இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான எம்.எல்.ஏ-க்கள்தான். இருந்தபோதும், மூன்று வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் பா.ஜ.க-வுக்குத் தாவினார்கள்.

மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் விதமாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் இன்று, காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது. அதில், மாநிலங்களவைத் தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால், அவரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

  'நோட்டா', குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில்தான் முதல்முதலாக அறிமுகப்படுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் தங்கவைக்கப்படுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக 'நோட்டா'க்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் கட்சி இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளது.  இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. குஜராத் எம்.எல்.ஏ க்கள், தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!