Published:Updated:

நிதிஷ்குமார் கட்சியிலிருந்து விலகினார் சரத்யாதவ்

வி.எஸ்.சரவணன்
நிதிஷ்குமார் கட்சியிலிருந்து விலகினார் சரத்யாதவ்
நிதிஷ்குமார் கட்சியிலிருந்து விலகினார் சரத்யாதவ்

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்ட்ரியா ஜனதா தளம் கட்சியுடன் நித்திஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து அங்கு ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதல்வரானார். சென்ற வாரம் புதன் அன்று லல்லு பிரசாத் கட்சியுடன் முரண்பாடு என நிதிஷ் முதல்வர் பதவியிலிருந்து விலகி, அடுத்த நாளே பாரதிய ஜனதா கட்சியின் உதவியுடன் மீண்டும் முதல்வரானார். 

நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத் யாதவ் இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதாகப் பேட்டி அளித்தார். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்படும் எனும் செய்தி உலவியது. அதேபோல இன்று சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகியுள்ளார். விரைவில் அவர் புதிய கட்சியைத் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.