Published:Updated:

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

சிகரெட்டைப் பொசுக்குமா மத்திய அரசு?

சாலைகளில், பெட்டிக் கடைகளில், பேருந்து நிறுத்தங்களில், திரையரங்க வாசல்களில்... என எங்கும் தென்றலின் பூங்கரங்கள் தீண்டாமல், புகைதான் நம்மை சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? அது சிகரெட் புகை.

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

பெரும்பாலான மனிதர்களின் ஆறாவது விரலாக மாறியிருக்கும் சிகரெட்டை பொசுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோதே சிகரெட் மீது 72 சதவிகித வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவிகித வரியும், புகையிலை மீது 55 சதவிகித வரியும் உயர்த்தப்பட்டது. இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இப்போது புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பை 18-லிருந்து 25 ஆக உயர்த்தியதோடு, பொது இடங்களில் பீடி, சிகரெட் பிடிப்போரின் அபராதத் தொகையையும் உயர்த்துவதற்கான சட்டத்தையும் இயற்ற இருக்கிறார்கள்.

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

  சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கி இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 2030-ல் புகை பிடித்தல் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேரை கொல்லும்’ என்று உலக சுகாதார மையம் எச்சரித்து இருக்கிறது.

பல ஆண்டுகளாகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்தி வரும் பேட்டர்சன் கேன்சர் சென்டரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் எஸ்.விஜயராகவன், ''ஒரு குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் ஒன்றில் இருந்து மூன்று வயது வரை அம்மாவுடன்தான் இருக்கும். அடுத்த இரண்டு வருடங்கள் பெண் குழந்தையாக இருந்தால் அப்பாவையும் ஆண் குழந்தையாக இருந்தால் அம்மாவையும் பிடிக்கும். அடுத்து ஐந்து வயதில் இருந்து 13 வயது வரை பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை, அவர்கள் பேசுவதை உள்வாங்கி

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் 13 வயதிலேயே மெச்சூரிட்டி அடைந்துவிடுவார்கள். ஆனால், ஆண்களுக்கு 18 வயது வரை ஆகும். அதனால்தான், முன்பு 18 வயது வரை எந்தப் பழக்கத்துக்கும் அடிமை ஆகாத ஆண்கள், அதன்பின் அடிமை ஆக மாட்டார்கள் என்கிறார்கள். ஆனால், அந்த வயதில்தான் கொஞ்சம் குறுகுறுப்பு பையன்களுக்கு இருக்கும். சினிமா ஸ்டாரைப் பார்த்து அதேபோல் செய்து பார்க்கும் வாய்ப்புகள் அந்த வயதில்தான் அதிகம். அந்த வயதுக்கு மேல் பக்குவப்பட்டுவிடுவான். சிகரெட், மது போன்ற போதைப் பொருட்கள் நமக்கு தேவையில்லாதது என அவனே ஒதுக்கிவிடுவான். பல வீடுகளில் அப்பா சிகரெட் பிடிப்பதால், அந்தப் புகையை அவர் மனைவியும், குழந்தையும் சுவாசித்து அவர்களுக்கும் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் ஒப்பிடும் வகையில் இப்போதுதான் புற்றுநோய் 100 சதவிகிதம் புகைப் பழக்கத்தால் அதிகமாகிவிட்டது. மெள்ளக் கொல்லும் இந்த விஷத்தை விட்டுவிடுங்கள். உங்களுக்கும் நல்லது; உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது'' என்றார்.

சிகரெட், மது போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பசுமை தாயகம் அருள், ''இது வரவேற்கப்பட வேண்டியது. 25 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்குத்தான் மது விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால், சிறுவர்கள் போய் கேட்டாலும், அவர்களுக்கும் விற்கிறார்கள். சட்டம் இயற்றியதோடு தங்கள் கடமை முடிந்தது என்று இல்லாமல், இதனை கண்காணிக்க வேண்டும். விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

சிகரெட் பழக்கத்தைச் சாம்பலாக்க வேண்டியது அரசின் கடமை.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

அடுத்த கட்டுரைக்கு