ரஜினிகாந்தை சந்தித்த பூனம் மகாஜன்

பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியின் சார்பாக சென்னையில் இன்று, கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தப்படுகிறது. இதில்  கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பா.ஜ.க-வினர் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

poonam mahajan meets rajinikanth

இந்தப் பேரணியின் சிறப்பு விருந்தினராக, மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன், தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர்கள்  உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். இதில் பூனம் மகாஜன், பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான 'பாரதிய ஜனதா யுவ மோர்சா'வுக்குத் தலைவராக உள்ளார். இவர், மறைந்த முன்னாள் பா.ஜ.க-வின் முன்னணித் தலைவரான ப்ரமோத் மகாஜனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பேரணியில் கலந்துகொள்வதற்காக, இவர் நேற்று சென்னை வந்தடைந்தார். 


 பூனம் மகாஜன், நடிகர் ரஜினிகந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பூனம் மகாஜன், "நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி, லதா ஜி அண்ட் தலைவா" எனக் கூறியுள்ளார். அவர்கள் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட  புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!