"இப்போதாவது விழித்தார்களே..!" - கலகலத்த கே.பி.முனுசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அ.தி.மு.க பல்வேறு அணிகளாகப் பிரிந்தது. இதில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியுடன் பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவ்வப்போது பேசப்பட்டுவந்தது. 

k.p munusami


இந்நிலையில், இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலா அறிவித்த தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, தினகரனை ஒதுக்கி வைப்பதாக அதிகாரபூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றியது. 

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள் இன்று அவரது வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கே.பி.முனிசாமி, "தற்போதுதான் பழனிசாமி அணியினர் விழித்துள்ளனர். தினகரனை ஒதுக்கி வைத்ததுபோல சசிகலா குடும்பத்தையும் கட்சியைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்த விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் உள்ளன. அணிகள் இணைவது தொடர்பாக மறைமுகப் பேச்சுவார்த்தை நடப்பதாக அமைச்சர்கள் மட்டும்தான் கூறுகிறார்கள். பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதாகச் சொல்வது வெறும் யூகமே" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!