Published:Updated:

''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''

குப்புறப்படுத்துக்கொண்ட நித்தி..

பிரீமியம் ஸ்டோரி

'நீங்கள் மற்றவர்களைத் துன்புறுத்தாதபோது, நிச்சயம் உங்களையும் யாரும் துன்புறுத்த முடியாது. நீங்கள் இந்த உலகத்தை துன்புறுத்தாதபோது இந்த உலகம் உங்களை துன்புறுத்தாது. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நெறிமுறை மற்றவர்களுக்கு ஒளி வீச வேண்டும். என் உடலுக்குள் இருக்கும் ஆன்மா உங்கள் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்கும்...’- ஆண்மை பரிசோதனையை முடித்துவிட்டு வந்த அடுத்த நாள் பக்தர்களுக்கு நித்தியானந்தா சொன்ன அருளுரை இது.

''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''

எப்படியாவது ஆண்மை பரிசோதனைக்கு தடை வாங்கிவிட உச்ச நீதிமன்றம் வரை போனார் நித்தியானந்தா. ஆனால், உச்ச நீதிமன்றமோ, 'இதற்குத் தடைவிதிக்க முடியாது. நீங்கள் ஆண்மை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டது. அதன் பிறகு கடந்த 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அன்று காலை சரியாக 7.30 மணிக்கு தனது சீடர்கள் புடைசூழ மருத்துவமனைக்குள் நுழைந்தார் நித்தியானந்தா. மருத்துவமனைக்கு வெளியே மீடியா, போலீஸ், கன்னட அமைப்புகள் என்று பெருங்கூட்டமே கூடியிருந்தன. காலை 7.30 மணிக்குத் தொடங்கிய பரிசோதனை முடிய மாலை 5 மணி ஆனது. சரியாக ஒன்பதரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார் நித்தியானந்தா.

மருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் உள்ளே என்ன நடந்தது என விசாரித்தோம். ''முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டியிருந்த காரணத்தினால் காலை தண்ணீர்கூட குடிக்காமல் வரச் சொல்லியிருந்தோம். அதன்படியே நித்தியானந்தாவும் வந்திருந்தார். அவருக்கு இங்கே பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மருத்துவமனையின் டீன் துர்கன்னா தலைமையில் நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் டாக்டர் ராட்கல், தலைமை உளவியல் டாக்டர் சந்திரசேகர், பொது மருத்துவர் வீரன்னகவுடா, மகப்பேறு மருத்துவர் வெங்கட், சிறுநீரக கதிரியக்கவியல் டாக்டர் ராமலிங்கையா, குரல் வள பரிசோதனை நிபுணர் டாக்டர் சுஜதா சித்தபா என 7 டாக்டர்கள் உள்ளடக்கிய டீம் நித்தியானந்தாவுக்கு பரிசோதனை செய்தார்கள்.

நித்தியானந்தா காலை மருத்துவமனைக்குள் வந்ததும் முதலில் ஒருமணி நேரம் தரையில் அமர்ந்து தியானம் செய்தார். உடலை டாக்டர்கள் தொடுவதற்கே அனுமதிக்காமல் அடம் பிடித்தார். மிகவும் பதற்றமாக இருந்தார். 9 மணிக்கு மேல்தான் இயல்பு நிலைக்கு வந்தார். அதன் பிறகே பரிசோதனை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு டெஸ்ட்டின் போதும் எதற்காக இந்த டெஸ்ட் எடுக்கப்படுகிறது என்று டாக்டர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் நித்தியானந்தா. அதன் பிறகே அந்த டெஸ்ட் எடுக்க அனுமதித்தார். காலையில் முழு உடல் பரிசோதனை முடிந்ததும் அவரை சாப்பிட அனுமதித்தனர். ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்த பழங்களையும், ஜூஸையும் மட்டும் சாப்பிட்டார்.

''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''

12 மணிக்கு நரம்பியல் டாக்டர்கள் அவரின் ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மையைப் பரிசோதித்து பார்க்கப் வேண்டும் என்று சொன்னபோது அவரின் முகம் மாறியது. அந்தப் பரிசோதனைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் நீண்ட நேரம் படுக்கையில் குப்புறத் திரும்பிப் படுத்துக்கொண்டார். பிறகு தலைமை டாக்டர்கள் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். 'சரி டெஸ்ட் எடுக்கலாம். இங்கே எங்காவது கேமரா இருக்கிறதா என்று என் சீடர்கள் பார்த்து செக் பண்ணிய பிறகுதான் ஒப்புக்கொள்வேன்!’ என்றார் நித்தியானந்தா. அதற்கு டாக்டர்கள் சம்மதம் சொன்னார்கள். நித்தியானந்தா சீடர்கள் அந்த அறையை வந்து பார்த்தார்கள். கேமரா இல்லை என்று அவர்கள் சொன்ன பிறகே நித்தியானந்தா டெஸ்ட்டுக்குத் தயாரானார். ஆனால், அத்தனையும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த டெஸ்ட் முடிந்ததும் ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மதிய உணவை நித்தி சாப்பிட்டார். சற்று நேரம் ஓய்வெடுத்தார். பிறகு, மன ரீதியான வீக்னஸ் தெரிந்து கொள்ளுவதற்கு அவரிடம் 18 கேள்விகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் சொன்னதோடு, கேள்வி கேட்ட மருத்துவரின் மனநிலையை மாற்றும் அளவுக்கு உளவியலாக பெரும் திறன் படைத்தவராக இருந்தார்'' என்று சொன்னார்கள்.

பரிசோதனைகள் முடிந்து வீல் சேரில் உட்காரவைத்து வெளியே அழைத்து வந்தனர். தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸில் நித்தியானந்தா ஏற்றப்பட்டார். ஆம்புலன்ஸ் மடிவாலாவில் உள்ள தடய அறிவியல் பரிசோதனை நிலையத்துக்குப் போனது. அங்கே நித்தியானந்தாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கே குரல் பரிசோதனை முடிந்ததும் ஆசிரமத்துக்குக் கிளம்பிவிட்டார் நித்தியானந்தா.

மறுநாள் காலை பிடதி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அருளாசி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு வீல் சேரில் வாடிய முகத்துடன் வந்தார் நித்தியானந்தா. ''ஆன்மிகம் மட்டுமே என் வாழ்க்கை. என் மீது இங்குள்ள சிலரும், போலீஸாரும் தொடர்ந்து குறை சொல்லி வருகிறார்கள். மீடியா என்ற பெயரில் இங்கிருக்கும் சிலர் நேற்று நான் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது என் காரை துரத்தியபடி வந்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த தொந்தரவுகளில் இருந்து நான் விடுபட நினைக்கிறேன். அதனால் என் ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறேன். பக்தர்களாகிய நீங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிடதி ஆசிரமம் வழக்கம்போல செயல்படும். நானும் எப்போது வேண்டுமானாலும் இங்கே வந்து போவேன்!'' என்று கண் கலங்கியபடி பேசியிருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் நித்தியானந்தாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறது மருத்துவமனை. அதில் என்ன இருக்கிறது என்று விசாரித்தோம். ''இந்த வயதுடைய ஆண் மகனுக்கு என்ன உணர்வுகள் இருக்குமோ அது நித்தியானந்தாவுக்கு இருக்கிறது. அவரது குரலில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. அவர் முழு ஆண்மை உடையவராக இருக்கிறார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இதனை வைத்து போலீஸார் தனது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி, கா.முரளி

 'நீ ராதை... நான் கண்ணன்!’

நித்தியானந்தாவின் பெண் சீடர்களில் ஒருவரான ஆர்த்தி ராவ் கொடுத்த புகார்தான் நித்தியானந்தாவை

''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''

தற்போது மருத்துவமனையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஆர்த்தி ராவ் கொடுத்த புகார் என்ன? '' நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்ச எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்தது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன்,  ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பி என்னையே அவருக்குக் கொடுத்தேன்'' என்று அதிர்ச்சிப் புகார் கொடுத்தார். அத்துடன் தன்னை தொலைபேசியில் மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஆர்த்தி ராவ். இந்தப் புகார் சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில்தான் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய... நித்தியானந்தா மறுத்து வந்தார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட தற்போது ஆண்மை பரிசோதனை நடந்துள்ளது. நித்தியானந்தா தரப்பிலோ, ''ஆர்த்தி ராவ் கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். பல ஆண்களோடு உறவு வைத்துக்கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. அந்தப் பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மைகொண்டது. ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, சுவாமியின் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால்  அந்த நோய் சுவாமிக்கும் வந்திருக்க வேண்டும் அல்லவா!'' என்று கேட்கிறார்கள். இனி அதுபற்றிய விசாரணை விரியும்!

''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு