Published:Updated:

மகேந்திரன் மர்மம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை புலம்பவைத்த 'சாமானியர்'!

பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தாம் சாமானியர்களைப் புலம்பவைப்பார்கள். சாமானியர் ஒருவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரை புலம்பவைத்திருப்பது ஆச்சர்யமே!

பாலாஜி
பாலாஜி

தமிழக ஆளுங்கட்சி அமைச்சர்களில் கணிசமானோர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். நாட்டில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும் தடாலடியாக பதில் சொல்லி அனைவரையும் அதிரவைக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவரும் ஒரு வழக்கு ரொம்பவே அப்செட் செய்துள்ளது. தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதைத் தொடர்ந்து, "கட்சியிலேயே எனக்கு எதிராக சிலர் வேலை செய்கிறார்கள்" என்று கொந்தளித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. விரிவாக படிக்க http://bit.ly/36NNRoA

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், "வழக்கில் முகாந்திரமில்லை" என்று முதலில் சொன்னது லஞ்ச ஒழிப்புத் துறை.

அமைச்சர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்று வழக்குரைஞர்கள் வட்டாரம் கிசுகிசுத்தது. அதையடுத்து, ராபர்ட் என்கிற வழக்குரைஞர் இந்த வழக்கில் ஆஜரானார்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விசாரணை நடத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் ராஜேந்திர பாலாஜியின் சொத்துமதிப்பு நிர்ணயிக்கப் பட்ட அளவைவிட குறைந்த அளவே அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தது லஞ்ச ஒழிப்புத் துறை. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "முதற்கட்ட விசாரணை அடிப்படையிலேயே சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்க முடியுமா? ஏன் அடுத்தகட்ட விசாரணையைத் தொடரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, முதற்கட்ட விசாரணை அறிக்கையின் 750 பக்கங்களையும் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதுதான் இப்போது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் ராஜேந்திர பாலாஜிடம் பேசினோம். "இந்த வழக்கை தாக்கல்செய்த மகேந்திரன் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. அவர் நீதிமன்றத்துக்கும் வருவதில்லை. இந்தப் புகாரை ஆரம்பத்திலேயே' ஆதாரம் ஏதுமில்லை' என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடித்துவிட்டது. ஆனால், மீண்டும் மீண்டும் இதே புகாரில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னணி என்னவெனத் தெரியவில்ல" என்று புலம்பினார்.

அமைச்சர்மீது வழக்கு தொடர்ந்த மகேந்திரன் என்பவர் தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும்தான் வெளியாகியிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மகேந்திரனுக்காக பிரபு ராஜதுரை என்கிற வழக்குரைஞர் ஆஜரானார். வழக்கு தொடர்பான தகவல்களையும் மீடியாக்களிடம் உற்சாகமாக அவர் பகிர்ந்துகொண்டார். பிறகு என்ன காரணத்தினாலோ, அவர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். அமைச்சர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்று வழக்குரைஞர்கள் வட்டாரம் கிசுகிசுத்தது. அதையடுத்து, ராபர்ட் என்கிற வழக்குரைஞர் இந்த வழக்கில் ஆஜரானார். ஒருகட்டத்துக்குப் பிறகு அவரும் வழக்கிலிருந்து பின்வாங்கிக்கொண்டார்.

மகேந்திரன் மர்மம்:  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை புலம்பவைத்த 'சாமானியர்'!

அதன் பிறகு, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும், மனுதாரர் மகேந்திரனோ, அவர் சார்பில் வழக்குரைஞர்களோ ஆஜராவதில்லை. நீதிபதியே வழக்கை விசாரித்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வரிசையாக உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார். மகேந்திரனைத் தொடர்புகொள்வதற்காக அவர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர்கள், நீதித்துறை வட்டாரம், காவல் துறை எனப் பல்வேறு தரப்பில் விசாரித்தபோதும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தாம் சாமானியர்களைப் புலம்பவைப்பார்கள். சாமானியர் ஒருவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரை புலம்பவைத்திருப்பது ஆச்சர்யமே!

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முழுமையான புலம்பலையும், அவரது ஆதரவாளர்களின் சந்தேகங்களையும் விரிவாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "எனக்கு எதிராக எங்கள் கட்சியிலேயே சிலர்!" - ராஜேந்திர பாலாஜி ஆதங்கம் https://www.vikatan.com/government-and-politics/politics/minister-rajendra-balaji-upset-for-asset-case

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |