Published:Updated:

``நீங்க சம்பாதிக்கிறீங்க... நாங்க?" - உள்ளாட்சித் தேர்தல் `கேள்வி'க்குப் பின்னால்..!

உள்ளாட்சி
உள்ளாட்சி

கடந்த மூன்றாண்டுகளில் பட்ஜெட்டில் தமிழக உள்ளாட்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடந்துள்ளன.

கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி. அமெரிக்கப் பயணம், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றி, டாக்டர் பட்டம் என உற்சாகத்தின் உச்சத்தில் திளைக்கிறார். பன்னீரை மொத்தமாய் ஓரங்கட்டி தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்து இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்களே பேசத் தொடங்கியி ருக்கிறார்கள். அமைச்சர்களும் அவரைப் புகழ்வதைப் பார்த்தால் சீக்கிரமே கட்சியின் பொதுச்செயலாள ராகவும் எடப்பாடி பொறுப்பேற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது. விரிவான அலசலுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2WPrHyy

ஒட்டுமொத்தமாய் சூழ்நிலை தனக்குச் சாதகமாய் இருப்பதாக நினைப்பதால் உள்ளாட்சித்தேர்தலை அவர் நடத்திவிடுவார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அவரின் சகாக்களும் டிசம்பருக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்கவும் செய்திருக்கிறார்கள்.

சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அதன் தலைமைக்கு இருக்கிறது. அது மட்டுமன்றி, கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளும் பதவியின்றி, சம்பாதிக்க வழியின்றி சலிப்புடன் இருக்கின்றனர். ''நீங்க எல்லாம் சம்பாதிக்கிறீங்க. எங்களுக்கு என்ன செஞ்சீங்க?'' என்று அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் பார்த்துக் கேள்வி எழுப்பவும் ஆரம்பித்துவிட்டனர்.

உள்ளாட்சி
உள்ளாட்சி

கடந்த மூன்றாண்டுகளில் பட்ஜெட்டில் தமிழக உள்ளாட்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடந்துள்ளன. இவற்றைத் தவிர்த்து, ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச் பாரத், அம்ருட், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களிலும் தமிழகத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடக்கிறது.

உரிய காலத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடந்திருந்தால் இந்தத் தொகையில் 1,31,794 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பங்கு போயிருக்கும். ஆனால் கமிஷன் கேட்பதற்கு ஆளில்லாததால் அத்தனையும் ஓரிடத்துக்கே போவதாகக் குமுறல்கள் கேட்கின்றன.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளின் ஆதிக்கமும் அதிகரித்திருக்கிறது. ஆனால் பணிகள் சரிவர நடப்பதில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களிலேயே உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள் கந்தலாகக் கிடக்கின்றன. கிராமத்துச்சாலைகளின் நிலை இன்னும் மோசம். பாதாளச் சாக்கடைப்பணிகள் படுமந்தமாக நடக்கின்றன. பாதிக்கும் மேலே தெருவிளக்குகள் எரிவதில்லை. குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. நகரங்கள் கொசுக்களின் உற்பத்தித் தொழிற்சாலைகளாகியிருக்கின்றன. டெங்கு, மர்மக்காய்ச்சல்கள் படையெடுக்கின்றன. குடிநீர் விநியோகத்தில் குளறுபடிகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களின் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

தி.மு.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதைவிட, உட்கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளைச் சமாளிப்பதுதான் பெரிய சவால்.

எல்லாவற்றையும்விட உள்ளாட்சித்தேர்தல் நடத்தினால்தான் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று மத்திய அரசும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அதனால் உள்ளாட்சித்தேர்தலை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாது என்ற சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

வேலைவாய்ப்பின்மை, தொழில் வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி, கட்டுக்கடங்காத லஞ்சம், ஓயாத ஊழல் என நொந்து வெந்து கிடக்கும் தமிழக மக்களும் உள்ளாட்சித்தேர்தலை ஒரு திருவிழாவைப் போலத்தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் பெரும் வெற்றியைப் பெறுவது அ.தி.மு.க தலைமைக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை. தி.மு.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதைவிட, உட்கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளைச் சமாளிப்பதுதான் பெரிய சவால்.

- அ.தி.மு.க, தி.மு.க எதிர்கொள்ளும் சவால்களுடன் கட்சிகளின் நிலையையும் அலசும் ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > ஆபரேஷன் உள்ளாட்சி! - தயாராகும் தமிழகக் கட்சிகள் https://www.vikatan.com/government-and-politics/election/tn-political-parties-focus-on-local-body-election

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு