Published:Updated:

ஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க!

ஸ்டாலின்

மருத்துவரின் வெறுப்பு, அறிக்கையிலேயே எதிரொலித்தது. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி பயமே ஸ்டாலினை இப்படி அறிக்கைவிடவைத்துள்ளது.

ஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க!

மருத்துவரின் வெறுப்பு, அறிக்கையிலேயே எதிரொலித்தது. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி பயமே ஸ்டாலினை இப்படி அறிக்கைவிடவைத்துள்ளது.

Published:Updated:
ஸ்டாலின்

''தி.மு.க - பா.ம.க இடையே அறிக்கைப் போர் முற்றிவருகிறதே?'' என்று கேட்டோம்.

ஸ்டூலைவிட்டுக் கீழிறங்கிய கழுகார், ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் கொடுத்த ஓர் அறிக்கைதான் ராமதாஸ் தரப்பை இவ்வளவு சூடாக்கிவிட்டது.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2OHwHn4

''கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் குறித்த அறிக்கையா?''

''அதேதான்... வன்னியர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, 1969-ம் ஆண்டு இறந்தார். அவரின் மறைவுக்கு, 'ஏழையாகப் பிறந்து... ஏழையாக இறந்தவர்' என புகழஞ்சலி செலுத்தினார் கருணாநிதி. இப்போது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதேபோல், அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் கட்டப்படும்' என்று அறிவித்தார்.''

ராமதாஸ் தரப்பு, இந்த விவகாரத்தை லேசில் விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்திருக்கிறதாம்.

''இதில் என்ன பிரச்னை?''

''அறிக்கையில் 'மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்' என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின். இவை மூன்றுமே பா.ம.க-வின் அடிநாதமான விஷயங்கள். குறிப்பாக இடஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் பேசுவதை ராமதாஸ் சுத்தமாக விரும்பவில்லையாம்.''

''ஓஹோ!''

''மருத்துவரின் வெறுப்பு, அறிக்கையிலேயே எதிரொலித்தது. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி பயமே ஸ்டாலினை இப்படி அறிக்கைவிடவைத்துள்ளது. வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க ஒன்றும் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 21 சொந்தங்களின் உயிரை இழந்தே இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாக பா.ம.க போராடிவருகிறது. அதில் 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சிதான். வன்னியர் இடஒதுக்கீடு பற்றிப் பேசும் ஸ்டாலின், முதலில் அவர் கட்சியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரட்டும். கோவிந்தசாமி நூற்றாண்டு விழாவைக்கூட நடத்தாதவர் ஸ்டாலின். கோவிந்தசாமி குடும்பத்துக்கு உரிய மரியாதையை கட்சியில் தரவில்லை. இப்போது எந்த நோக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?' என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''தி.மு.க தரப்பு டென்ஷன் ஆகியிருக்குமே?''

''ஆமாம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வைத்து பதில் அறிக்கை கொடுத்தார்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பமும் இடஒதுக்கீடு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது என்பதுடன், தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அவரைவைத்து ராமதாஸுக்கு எதிராக முரசொலியில் கட்டம் கட்டிவிட்டனர். பா.ம.க தரப்பில் துணை பொதுச்செயலாளர் வைத்தியநாதனைவைத்து இதற்கு பதிலடி கொடுக்க... இந்த விவகாரம் பற்றி எரிகிறது.

''இதற்கு எப்போதுதான் முடிவாம்?''

''ராமதாஸ் தரப்பு, இந்த விவகாரத்தை லேசில் விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்திருக்கிறதாம். அதை அ.தி.மு.க-வும் ரசிக்கிறது. ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு எதிராக வன்னியர் மத்தியில் புகைச்சல் இருப்பதால், இந்த விவகாரத்தைவைத்து விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகளைக் கவர நினைக்கிறது ஆளுங்கட்சி.''

''டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தித்திருக்கிறாரே ராமதாஸ்?''

''ஆமாம், அன்புமணி ராமதாஸ் மூலமே நேரம் வாங்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலைக்கான கோரிக்கையை பிரதமரிடம் வைத்ததாக ராமதாஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும், தன் மகனின் அரசியல் எதிர்காலம் குறித்தும் சில விவரங்களை பிரதமரிடம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வெறும் அரசியல் சந்திப்பாக இது இருந்துவிடக் கூடாது என்பதால் கோரிக்கை மனுவையும் கொடுத்திருக்கிறாராம்.''

ஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க!

> சசிகலா விவகாரம் மீண்டும் பூதாகரமாகிவிட்டது. சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க தரப்பு நினைக்கிறதாம். இதன் பின்னணியை விரிவாகச் சொல்லும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை வாசிக்க > சசிகலாவை முடக்கும் பா.ஜ.க... பன்னீர் வைத்த நெருப்பு! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-sasikala-oct-16

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism