Published:Updated:

சசிகலாவின் விடுதலைக்கு விலை... 'ஷாக்' பேரத்தின் பின்னணி என்ன?

சசிகலா
சசிகலா

''எதற்காக இப்படி 'ஷாக்' ஆகிறீர்? அந்த மகனின் அரசியல் ஆட்டங்கள் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றன

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் சென்னை மாநகராட்சியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறது பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் உதவியாளர் ப்ருத்வி என்பவரை மேயர் வேட்பாளராகக் களமிறக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31pxP1m

சீன உச்சிமாநாட்டுக்காக சென்னை வந்திருந்த மோடி, சந்தித்த ஒருசில பா.ஜ.க நிர்வாகிகளில் ப்ருத்வியும் ஒருவர். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, 50,000 தெருமுனைச் சந்திப்புக்கான திட்டங்கள்குறித்து மோடியிடம் பேசியிருக்கிறார் ப்ருத்வி. அதைக் கேட்ட மோடி "கெட் ரெடி!" என, தோளில் தட்டிவிட்டுச் சென்றாராம்.

*

தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய் படத்தின் டிரெய்லரைப் பார்த்த குஷியில், ''பிகிலேஏஏஏ...'' என்று இமிடேட் செய்துகொண்டே வந்தார் கழுகார். நாமும் பதிலுக்கு ''ஜெயிலேஏஏஏ...'' என்று குரல்கொடுக்க, அதிர்ச்சியுடன் பார்த்தார் கழுகார்.

சசிகலாவின் விடுதலைக்கு விலை... 'ஷாக்' பேரத்தின் பின்னணி என்ன?

"வேறொன்றுமில்லை. பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் பற்றி, கடந்த இதழில் கூறியிருந்தீர். மேற்கொண்டு ஃபாலோஅப் இருக்கிறதா?''

''சசிகலா, இரண்டரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்கு முதலில் சம்மதித்தவர்கள் எல்லோரும் இப்போது ஒதுங்கிப் போகிறார்களாம். காரணம், சமீபத்தில் டெல்லி தரப்புடன் நடத்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை பேரத்தில் மன்னார்குடி தரப்பு பிடிகொடுக்கவில்லை என்ற புதிய தகவல் இப்போது கசிந்துள்ளது!''

''அப்படியா?''

''இந்தமுறை பெங்களூரில் வைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திய பக்கத்து மாநிலத்துக்காரர்மீது சில குற்றச்சாட்டுகள் இருந்ததால், இந்தமுறை பேச்சுவார்த்தைக்கு வேறு ஒருவர் வந்துள்ளார். அவர், ஒரு வி.வி.ஐ.பி-யின் மகன்.''

சசிகலாவின் விடுதலைக்கு விலை... 'ஷாக்' பேரத்தின் பின்னணி என்ன?

''என்னது... வி.வி.ஐ.பி-யின் மகனா?''

''எதற்காக இப்படி 'ஷாக்' ஆகிறீர்? அந்த மகனின் அரசியல் ஆட்டங்கள் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்காகவே அவர் இரண்டு முறை பெங்களூரு வந்து சென்றுள்ளாராம். இந்த முறை டிமாண்ட்கூட ஏக 'ஷாக்' அடிக்கும் வகையில் பெரிதாக இருந்ததாம். சசிகலாவின் விடுதலைக்கு விலையாக, அவரின் சொத்துமதிப்பில் பாதியை தட்சணையாகக் கேட்கப்பட்டதாம். சம்மதம் என்றால், விடுதலை வேலைகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. அது விறுவிறுவென நடந்தேறும் என்றும் பேசப்பட்டிருக்கிறது.''

- இந்த மேட்டரில் 'சசிகலா தரப்பு ரியாக்‌ஷன் என்ன? எடப்பாடி என்ன நினைக்கிறார்...? - ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: விடுதலைக்கு விலை... சொத்தில் பாதி! - பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-sasikala-oct-20

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு